Pages

Monday, December 9, 2013

அசுபமாலா யோகம்


யோககால கிரகநிலை
சமஸ்த கிரகங்களும் இலக்கினத்திற்கு 6,8,12இல் இருந்தால் அசுபமால யோகம் என்க

யோக பலன்
துன்மார்க்கம் துக்கம் பிரர்வதம் செய் நன்றி மறந்து போகுதல் பயம் விசுவாசமின்மை உலக நிந்தை பெறுதல் கலகத்தில் பிரியமாதல் இவை யாவும் அசுபமாலா யோக பலன்களாகும்

அசுபமாலா யோக உதாரணம்
சமஸ்த கிரகங்களும் இலக்கினத்திற்கு 6,8,12களில் மறைந்திருப்பதால் அசுபமாலா யோகம் ஏற்பட்டு ஜாதகன் துன்புறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தனக்கு நிரம்பிய வசதி இருந்தும் தன் செல்வத்தைப் பிறருக்குத் தான தர்மம் செய்யாமல் மேலும் மேலும் பணத்தைச் சேர்க்கும் குறிக்கோளே பிரதானமாகக் கருதி உற்ற மனையாளைத் துன்புறுத்தி தன் மாமனார் வீட்டுச் செல்வத்தையும் கவர்ந்து தன்னைச் சார்ந்த உறவினர்களின் செல்வத்தையும் கவந்து அவர்களைத் துன்புறுத்தியதால் அசுபமாலா யோகம் என்னும் தீய யோகம் கொண்டு மறு ஜென்மத்தில் வருந்துவான்
பரிகாரம்
தினசரி 24 முறை காயத்ரி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment