Pages

Friday, December 6, 2013

பாலாரிஷ்டம்


ஒரு குழந்தை பன்னரண்டாவது ஆண்டுகள் வரை அவனது ஆயுளை நிச்சயம் செய்வதற்குச் சாத்தியமில்லை அது எவ்வாறெனில் ஒரு குழந்தை ஜனித்த முதல் நான்கு வருஷங்கள் வரை தாய் செய்துள்ள பாப கர்மத்தினாலும் அதற்கு மேல் 4 வருடங்கள் வரை தானே முன் செய்த பாபகருமத்தாலும் ஆயுளை இலக்கக்கடவன் என்றறிக ஆகவே ஒருவனது ஆயுர்ப்பாவம் 12 வருடங்களுக்குப் பின்தான் திடமாகக் கூறவேண்டும் என்பது திண்ணம்
இத்தோஷ பரிகாரத்திரன் பொருட்டு குழந்தை பிறந்த 12 வருஷங்கள் வரை பிரதி வருஷ ஜென்ம நட்சத்திரந் தோறும் ஜபம் ஹோமம் முதலிய ஆயுஷ்யகரமான கர்மங்களைப் புரிந்து பிள்ளையை சாந்தி முதலியவற்றால் தந்தையானவர் காரப்பாற்ற வேண்டும்


பூசம் பூராடம் சித்திரை ஆகிய நட்சத்திரங்களில்
1-ஆம் பாதத்தில் பிறந்தால் தந்தையையும்
2-ஆம் பாதத்தில் பிறந்தால் தாயையும்
3-ஆம் பாதத்தில் பிறந்தால் தன்னையும்
4- ஆம் பாதத்தில் பிறந்தால் மாமனையும் கொல்வான் என்று அறிந்திடுக
அது போலே
மூலம் நட்சத்திரம்
1- ஆம் பாதத்தில் பிறந்தால் தந்தையையும்
 2-ஆம் பாதத்தில் பிறந்தால் தாயையும்
3-ஆம் பாதத்தில் பிறந்தால் வம்சத்தையும் கெடுக்கும்
4-ஆம் பாதத்தில் பிறந்தால் சுபத்தையும் தரும்

ஆயில்யம் நட்சத்திரம்
1- ஆம் பாதத்தில் பிறந்தால் சுபம்
2-ஆம் பாதத்தில் பிறந்தால் வம்சத்தையும்
3- ஆம் பாதத்தில் பிறந்தால் தாயையும்
4-ஆம் பாதத்தில் பிறந்தால் தந்தையையும்  கெடுக்கும்

No comments:

Post a Comment