Pages

Friday, December 27, 2013

துர்யோகம்


துர்யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு கர்மஷ்தானமாகிய பத்தாமிடம் துர்க்கிரகச் சேர்க்கை அமையப் பெற்று பத்துக்குடைய கிரகம் துர்த்தானங்களாகிய 6,8,12ஆம் இவைகளில் பகை நீச்சம் மூடம் போன்ற துர்பலத்துடன் இருந்தால் துர்யோகம் ஏற்படும்


துர்யோக பலன்
துர்யோகத்தில் பிறந்தவன் மிகவும் கஷ்டப்பட்டுச் செய்த காரியத்திலும் பலனில்லாமல் பொதுமக்களிடம் ஏளனமும் நோய்மையும் பெற்று ஜனங்களுக்குத் துரோகம் செய்து அதனால் வயிறு வளர்த்து நிலையில்லாமல் சஞ்சாரம் பன்னுவோனாய் இருப்பான் என்க

துர்யோக உதாரணம்


லக்கினத்திற்கும் பத்தாமிடத்தில் செவ்வாய் நிச்சம் பெற்று 10குடைய சந்திரன் துர்த்தானமாகிய 12மிடம் இருப்பதால் துர்யோகம் ஏற்பட்டு ஜாதகன் வருந்துவான்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தொழில் போட்டி என்ற பெயரில் நியாயமாகத் தொழில் செய்பவரைத் கெடுத்து அவருக்குக்  கெட்ட பெயர் உண்டாக்கி அவர்தன் ஜீவனத்தைக் கெடுத்த காரணத்தால் மறு ஜென்மத்தில் அவர் சாபத்தினால் துர்யோகம் என்னும் அவயோகம் ஏற்பட்டு பொது மக்கள் பணத்தைத் துரோகம் செய்து துரோகி என்னும் பெயரேடுப்பான்


பரிகாரம்
குறைந்த பட்சம் 4 பேருக்காவது தொழில் தொடங்க உதவவேண்டும்

No comments:

Post a Comment