Pages

Saturday, December 7, 2013

சகோதரர்கள் எண்ணிக்கை காணும் சூத்திரம்:


இன்றைய நாகரீக உலகில் ஜனத்தொகை பெருக்கம் காரணமாக அரசின் கட்டாயத்தின் காரணமாயும், குடும்ப சூழல் காரணமாயும் கருவழித்தல், கர்ப்பத்தடை செய்து கொள்ளுதல் ஆகிய காரணங்களினால் நாம் குறிப்பிடும் சூத்திரம் பலனில்லாமல் போகும். இருப்பினும் சகோதர எண்ணிக்கையினை நம் முன்னோர்கள் காணும் விதம் பற்றி கூறியுள்ளதை தங்களுக்கும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஜாதக கணித முறையில் சுதேச மணிகண்டு கணிக்கப்பட்ட ஜாதகத்தில் அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்திலிருந்து 3- ஆம் அதிபதி நிற்கும் நக்ஷத்திர பாதம் முடிய எத்தனை நட்சத்திர பாதங்கள் உள்ளன என்று கணக்கிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதைபோல் அசுவினி நக்ஷத்திரம் 1- ஆம் பாதத்திலிருந்து செவ்வாய் நிற்கும் நக்ஷத்திர பாதம் முடிய எத்தனை நக்ஷத்திர பாதங்கள் உள்ளன என்றும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட இரண்டு எண்ணிக்கையினையும் கூட்டி அப்படி கூட்டி வந்த எண்ணிக்கை அசுவனி நக்ஷத்திரம் 1- ஆம் பாதத்திலிருந்து தொடங்கி எந்த நக்ஷத்திர பாதத்தில் முடிகின்றது என்பதைக் காணவும்.
இவ்வாறு கண்ட நக்ஷத்திர பாதம் நவாம்ஸ் சக்கிரத்தில் எந்த ராசிக்குரியது என்பதைக் கண்டு இந்த ராசியானது, மேஷ ராசி முதல் எத்தனையாவது ராசியாக வருகிறதோ, அத்தனை சகோதரங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நவாம்ஸ,சக்கிரத்தில் மேஷம் முதல் இவ்வாறு கணித்து வந்த இராசிக் கட்டம் முடிய உள்ளதற்கிடையில் இயற்கையில் மற்றும் லக்ன ரீதியாக உள்ள பாப கிரஹ வீடுகள் உள்ளனவோ , அத்தனை சகோதரங்கள் பல மின்றியும், பலன் இல்லாமலும் போய்விடும்.

2 comments:

  1. உதாரண ஜாதகம் இட்டு காட்டவும்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி ஐயா


    ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா நீங்கள் இடும் பதிவுகளை சிரமமின்றி நாங்கள் படிக்க தயவு செய்து பேக்ரவுண்டை மாத்தி அமைக்கவும்


    நன்றி ஐயா

    சிவாய நம😍🙏

    ReplyDelete