Pages

Friday, December 6, 2013

பர புருஷ ஜனனம்


சந்திரன் பலமற்றிருக்க 5மிடத்தில் சனியிருக்க அதற்கு ஏழாமிடத்தில் சூரியனும் சுக்கிரனும் இருந்தால் முதல் கணவன் விவாகரத்தாகி இரண்டாவது கணவனுக்குப் பிறந்தவன் என அறியவும்
12வது ஸ்தானத்தை சூரியன் பார்த்தாலும் 12வது ஸ்தானாதிபதி சூரிய சந்திர வர்க்கத்தில் இருந்தாலும் 21வது ஸ்தானம் சூரிய சந்திரகளோடு இருந்தாலும் பிறந்த குழந்தை முறைப்படி திருமணமாகாமல் கன்னிக்குப் பிறந்ததாகும்
சனி சந்திரனால் பார்க்கப்பட்டாலும் சூரியன் சனியுடன் கூடிக் கொண்டிருந்தாலும் சனியால் பார்க்கப்பட்டாலும் பிறந்த குழந்தை தத்து புத்திரனாகிப் போவான் அல்லது தந்தையை விட்டு விலகியோ அல்லது தந்தைக்குப் பிரயோசனைப் படாடவனாகவோ இருப்பான்
குரு லக்கினம் அல்லது சந்திரன் இவர்களில் ஒன்றை பாராமல் இருந்தாலும் லக்கினம் அல்லது ராசிகளில் ஒன்று உபய ராசியில் இல்லாமலிருந்தாலும் பரபுருஷனுக்குப் பிறந்தவன் என்று அறிக
துவதியை திதியும் ஞாயிற்றுக் கிழமையும் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்த நாளிலும்
திங்ககிழமை சப்தமி திதி ரேவதி நட்சத்திரம் சேர்ந்த நாளிலும்
ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி கேட்டை நட்சத்திரம் சேர்ந்த நாளிலும் ஜனித்தவன் பரபுருஷனுக்குப் பிறந்தவன் என்றறிக
சந்திரன் குருவினுடைய ராசிகளான தனுசு மீனங்க்களை அடைந்திருந்தாலும் லக்கினம் அல்லது குரு இவைகளில் ஒன்று குரு அம்சத்திலோ குரு நவாம்சையிலோ அமைந்திருந்தாலும் மேற்சொன்ன அத்தனை விதிகளும் அடிப்பட்டுபோகும் அதாவது பர புருஷனுக்குப் பிறக்காதவன் என்று அறியவும்

No comments:

Post a Comment