Pages

Thursday, December 19, 2013

சரள யோகம்


சரள யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு எட்டாமிடம் அசுபக் கிரகங்கள் அமர்ந்து அவ்வீட்டுக்குடையை கிரகம் துர்த்தானங்களாகிய 6,21 இத்தானங்களில் இருந்தால் சரள யோக பலன் ஏற்படும்


சரள யோக பலன்
சரள யோகத்தில் பிறந்தவன் தீர்க்காயுள் திடமான சிந்தனை பயமின்மை ஸ்ரீமானாக இருக்கை வித்தை புத்திரன் தனம் இவைகளோடு சேர்க்கை ஆரம்ப சித்தி சத்ருக்களை ஜெயிக்குந் தன்மை நிர்மலத்தன்மை ஆகிய இப்பேருகளை உடையவனாவான்


சரள யோக உதாரணம்
 இலக்கினத்திற்கு 8 மிடத்தில் பாபக்கிரகமான சனி இருக்கப் பெற்று 8க்குடைய சுக்கிரன் 12மிடம் இருக்கப் பெற்றதால் சரள யோக பலனால் இன்புறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காத்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்தமைக்காக மறு ஜென்மத்தில் சரள யோகம் என்னும் சுபயோகத்தைப் பெறுவான்

No comments:

Post a Comment