Pages

Saturday, December 7, 2013

மனைவி அமையும் திசை

ஒரு ஜாதகத்தில், ராசி சக்கரத்திலுள்ள 7- ஆம் இடம் எந்த திசைக்குரியது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். பொதுவாக ஒரு ஜாதகருக்கு இந்த திசையில் தான் கணவன் அல்லது மனைவி அமையப்பெறும்.
அதாவது லக்னத்திற்கு 7- ஆம் இடம்
மேஷம், சிம்மம், தனுசு - கிழக்கு
ிஷபம், கன்னி,மகரம் - தெற்கு
மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு
கடகம், விருச்சிகம், மீனம் - வடக்கு
என்ற திசைகள் கணவன், மனைவி அமையும் திசைகளாகும். இன்னுமொரு அமைப்பின் மூலம் களத்திரம் திசையை துல்லியமாக கணக்கிடலாம்.
7-ஆம் இடத்து அதிபதி எந்த திசைக்குரியவரோ அந்த திசையிலிருந்து தான் ஒரு ஜாதகருக்கு கணவன் அல்லது மனைவி அமையும். 7- ஆம் இடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு உரிய திசை எதுவோ அத்திசையிலிருந்து தான் களத்திரம் அமையும். இதனை தெளிவாக காட்டும் சக்கரம் ஒன்றினை அமைத்து காண்பிக்கிறோம். தேவை ஏற்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



மேற்கண்ட சக்கரத்தின்படி ஒரு ஜாதகரின் லக்னம் சிம்மம் என்றால் அதன் 7-ஆம் இடத்து அதிபதியாக சனி வருவதால் சனிக்குரிய திசையாகிய மேற்கிலிருந்துதான் இந்த ஜாதகருக்கு ‘’வரன்’’ (கணவன்) அல்லது ‘’ வது ‘’ (மனைவி) அமையும்

No comments:

Post a Comment