Pages

Wednesday, December 11, 2013

சரஸ்வதி யோகம்


சரஸ்வதி யோகக்கால கிரக நிலை
கலத்திரகாரன் சுக்கிரனும் தனகாரன் குருவும் புத்திரகாரன் புதனும் ஆகிய இவர்கள் கேந்திரத்திலாவது அல்லது இரண்டிலாவது இருந்து குரு ஆட்சி உச்சம் நட்பு இவற்றில் பலமாயிருன்டால் சரஸ்வதி யோகமென்க

சரஸ்வதி யோக பலன்
சரஸ்வதி யோகத்தில் பிறந்தவன் உயர்ந்த புத்தியுடன் நாடகம் கணிதம் அலங்கார சாஸ்திரம் இவைகளில் சாமர்த்தியம் கவிஇயற்றுவதில் சாமர்த்தியம் சாஷ்திரங்களில் சொல்லியபடி நடத்தில் உலகப் பிரசித்தி பெறுதல் அதிகமான தனம் செல்வம் பெறுதல் புத்திரர்களுடன் நட்பாக இருத்தல் இராஜாக்களிடம் சிரெஷ்டனாயிருத்தல் அனைத்து ஜனங்களாலும் பூஜிக்கப்படுதல் ஆகியவைகளைக் குறைவின்றி பெறுவான்

சரஸ்வதி யோக உதாரணம்
 இலக்கினத்திற்கு கேந்திரத்தில் சுக்கிரனும் புதனும் அமர்ந்து குரு ஆட்சி பெற்றதால் சரஸ்வதி யோக பலன்களை முழுவதுமாகப் பெறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் கல்வியிற் சிறந்த வேத விற்பன்னர்களை நன்கு நடத்தி அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து கல்விச் சாலையை நிறுவி மானார்க்கர்களுக்கு இலவசமாகக் கல்வித் தொண்டு செய்ததால் மறு ஜென்மத்தில் சரஸ்வதி யோகம் பெற்று புகழடைவான் .

No comments:

Post a Comment