Pages

Saturday, December 7, 2013

நவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?


சூரியன்:
ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் சூரியன் இருந்தால் உஷ்ணதேகமுள்ளவர். பிடிவாத குணமுடையவர். ஜாதகர் சுறுசுறுப்பாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். தைரிய சாலியாகவும் இருப்பார். லக்னத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால், எதிலும் முதன்மை வகிக்கும் குணம், படைத்தவராக இருப்பார் சிவப்பாக இருப்பார்.
சந்திரன்:
லக்னத்தில் சந்திரன் பலமுடன் காணப்பட்டால் குளுமையாக இருப்பார். அழகாக இருப்பார். அடிக்கடி ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார். எப்பொழுதும் கற்பனையில் மூழ்கியிருப்பார். கதை சொல்வதில் வல்லவர், மனைவிக்குப் பிரியமானவராக நடந்து கொள்வார்.
செவ்வாய்:
கோபத்திற்கு காரகத்துவமான செவ்வாய் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் முன்கோபியாக இருப்பார். முரட்டு சுபாவமுடையவர். கருணையில்லாதவர். கல்வியில் ஊக்கம் குறையும். முகத்தில் தழும்பு இருக்கும். லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தந்தைக்கு ஆகாது.
புதன்:
லக்னத்தில் புதன் இருந்தால் புத்திசாலியாக இருப்பார். கல்வி கேள்விகளில் சிறந்தவர், ஞானமுள்ளவர், செல்வசேர்க்கை உள்ளவர். சுகமுள்ளவர் சமயோசிதமாக பேசும் வல்லமைப் படைத்தவர் நல்லவர்.
குரு:
லக்னத்தில் குரு இருந்தால், பல சாஸ்திரங்களை அறிந்தவர், அறிவாளி, பலரும் போற்றும் நிலையை உடையவர். நல்லவர், வல்லவர், சுகமாக வாழக் கூடியவர். குருவின் அருள் பெற்றவர் தீர்க்காயுள் உடையவர்.
சுக்கிரன்:
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், அழகாக இருப்பார். அமைதியாக இருப்பார். முகவசீகரம் உடையவர். சாப்பாட்டு விஷயத்தில்ஆர்வம் உள்ளவராக இருப்பார்.
கணக்கு விசயத்தில் விபரமாக இருப்பார். மனைவியிடத்தில் பிரியமுள்ளவர். சிக்கனமாக இருப்பார். ஒரு சிலர் இவரை இதன் காரணமாக கருமி என்று கூட சொல்வார்கள். முகத்தில் எப்பொழுது மகிழ்ச்சி தாண்டவமாகும் சிவப்பாக இருப்பார்.
சனி:
சனி லக்னத்தில் இருந்தால் கருப்பாக இருப்பார். சற்று முன்கோபி சிடுசிடுவென்று இருப்பார். நிறைய கலைகளை கற்றுத் தேர்ந்தவர். மற்றவர்கள் இவரைத் தவறாக நினைத்துக் கொள்ளும்படி பெயர் எடுப்பார். ஞானம் உள்ளவர் உற்சாகமாக இருப்பார். தீர்க்காயுள் உடையவர்.
ராகு:
இலக்கனத்தில் ராகு இருந்தால் நிறம் சற்று குறைவாகவே ஜாதகர் இருப்பார். ஏதேனும் ஒரு வியாதியால் அவதிப்படுவர் முகத்தில் பல்வரிசை சீராக இருக்காது.
கேது:
ஞானம் உள்ளவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளவர். தெய்வீக சிந்தனை உள்ளவர்.

No comments:

Post a Comment