Pages

Tuesday, December 10, 2013

கெளரி யோகம்



யோககால கிரகநிலை
சரீகாரகனான சந்திரன் ஆட்சியிலாவது உச்சத்திலாவது கேந்திர திரிகொங்களிளிருந்து தனகாரகனும் புத்திரகாரகனுமான குருவால் பார்க்கப்பட்டால் கெளரி யோகமாகும்

யோக பலன்
மங்களகரமான கெளரி யோகத்தில் பிறந்தவன் அழகான திடமான தேகம் சிறந்த குளம் அரசன் அல்லது அரசர்களுக்கு சமமானவர்களின் நட்பு நல்ல குணமுள்ள புத்திரர்கள் பிறத்தல் தாமரை  மலருக்கு நிகராக அழகிய முகம் எதிரிகளாலும் துதிக்கப்படுதல் ஆகிய நற்பலன்கள் ஏற்படும்

கெளரி யோக உதாரணம்
இலக்கினத்திற்குத் திரிகோணத்தில் சந்திரன் ஆட்சி பெற்று ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்படுவதால் கெளரி யோகம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெறுவான்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் திங்கட்கிழமை தோறும் சோமவார விரதம் இருந்து மாலையில் பார்வதி பரமேஸ்வரரைத் துதித்து சிவசக்தி அடியார்களுக்குப் பணிவிடை செய்ததால் மறு ஜென்மத்தில் கெளரி யோகம் என்னும் பிரபலயோகம் பெற்று மிக்க புகலடைவான்

No comments:

Post a Comment