Pages

Saturday, December 7, 2013

முகத்தில் தழும்பு இருப்பது ஏன்?



நாம் இந்த உலகத்தில் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருடைய முகம் எவ்வித வடுவும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. சிலருடைய முகத்தில் தழும்பு இருக்கிறது. ஒரு சில திறமையான ஜோதிடர்கள், ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடன் இவர் முகத்தில் கீழே விழுந்து அடிப்பட்ட காயத்தின் தழும்பு இருக்கும் என்று கேட்டு, நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றனர். சிலர் எப்படி ஒருவரது முகத்தைப் பார்க்காமலேயே சரியாக சொல்லிவிட்டார். என்று நம்மில் பலர் நினைக்க்க் கூடும். இது ரொம்ப சுலபம். சில கிரக அமைப்பை வைத்து நாம் சொல்லி விடலாம்.
ஒருவரது முகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் லக்னத்தைத்தான் பார்க்க வேண்டும். ஒருவர் அழகாக இருக்கிறார் என்றால், அவர் லக்னத்தில் சுக்கிரன் இருக்க வேண்டும். சுக்கிரன் அழகைக் குறிக்க்க்கூடிய கிரகம் சிலருடைய ஜாதகத்தில் சுக்கிரனுக்குப் பதிலாக சந்திரன் போன்ற சுபகிரகங்களில் ஒன்றோ அல்லது பல கிரகங்களோ இருக்கும். எனவே முகம் அழகாக இருக்கிறது என்பதை இம்மாதிரியான கிரக அமைப்பை வைத்துக் சொல்லிவிட முடியும். இப்பொழுது முகத்தில் வெட்டுக்காயம், தழும்பு இவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்கிறேன். இதற்கு செவ்வாயைத்தான் பார்க்க வேண்டும். செவ்வாய் போர்கிரகம், கோபத்தைத் தூண்டி விடக்கூடிய கிரகம் யுத்த கிரகம். இரத்தத்தைக்காட்டும் கிரகம், எனவே அப்படிப்பட்ட செவ்வாய் லக்னத்தில் இருந்தால், கீழே விழுந்து அடிபட்டோ அல்லது வெட்டுக்காயம் பட்டோ, முகத்தில் தழும்பு இருக்கும். எனவே ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்தால், முகத்தில் தழும்பு இருக்கும் என்பதுஉறுதி,

No comments:

Post a Comment