Pages

Friday, December 27, 2013

இலக்கினாதிபதியும் இராசியாதிபதியும்


இலக்கினாதிபதியும் இராசியாதிபதியும் நண்பர்களாயிருக்கிறார் என்றால் பெரும்பாலும் இலக்கினத்திற்கும் இராசிக்கும் உரிய யோகாதிபதிகள் ஒன்றாக வருவார்கள் இதனால் இலக்கின ரீதியாக நன்மை செய்வதால் நன்மைகள் அதிகமாகக் கிட்டும்

அனால் இலக்கினாதிபதியும் இராசியாதிபதியும் பகைவர்களாயிருந்தால் பெரும்பாலும் இலக்கினத்திற்கு யோகாதிபதியாக வரும் கிரகம் இராசி ரீதியாகத் கெடுபலன் தரும் கிரகமாகிவிடும் இதனால் அந்தக் கிரகத்தின் திசாபுத்தியில் நன்மைகள் அதிகம் கிட்டாமல் போய்விடக் கூடும்

உதாணமாக மேஷ லக்கினம் சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம் மேஷத்தின் அதிபதியான செவ்வாயும் சிம்மத்தின் அதிபதியான சூரியனும் நெருங்கிய நண்பர்கள் மேஷ இலக்கணத்திற்கு நன்மை செய்பவர்களான சூரியனும் குருவும் சிம்ம ராசி  ரீயாகவும் நல்லவர்களாகவே வருவதால் அந்த திசாபுத்திக்காலங்களில் அபரிமிதமான நனமைகளை எதிபார்க்கலாம்

ஆனால் மேஷ லக்கினம் கன்னி ராசி என்று வைத்துக் கொள்வோம் இலக்கினாதிபதி செவ்வாயும் இராசியாதிபதி புதனும் கடும் பகைவர்களாகின்றனர் இலக்கினத்திற்கு நன்மை செய்யும் குருவும் சூரியனும் இராசி ரீதியாகப் பாதகாதிபதியாகவும் விரையாதிபதியாகவும் வருகின்றனர் இதனால் அந்தக் கிரகங்களின் திசாபுத்திக் காலங்களில் நன்மை சற்றுக் குறையவே செய்யும்


இப்படி இலக்கினாதிபதி இராசியாதிபதியும் கடும் பகைவர்கலாயிப்பார்கலானால் அந்த ஜாதகத்தின் அடிப்படைப் பலன் குறைந்துவிடும் இந்தக் கருத்தே இப்பாடலில் சொல்லாப்பட்டிருக்கிறது   

No comments:

Post a Comment