Pages

Saturday, November 30, 2013

12ம் இடத்தில் லக்னாதிபதி இருந்தால் என்ன பலன்?



12ம் இடத்தில் லக்னாதிபதி இருந்தால் என்ன பலன்?

12ஆம் வீட்டில் விரயஸ்தானம் இங்கு லக்னாதிபதி இருந்தால், இவர் வாழ்க்கையில் நிறைய விரயங்கள் ஆகும். பணம் தண்ணீரால் செலவாகும் ஆடம்பரமாக செலவழிப்பவராக இருப்பார். இப்படிப்பட்ட அமைப்புடையுடையவர்கள் தன்பெயரில் சொத்து சேர்க்கக்கூடாது. பணம் சேர்க்கக் கூடாது. மேலும் லக்னாதிபதி பன்னிரண்டாம் இடத்தில் இருந்தால், சிலருக்கு எவ்வளவு தகுதி இருந்தாலும், தகுதிக்கேற்ப புகழ் கிடைக்காது. எனவே ஜோதிடம் என்பது உண்மை என்பது நீங்கள் பலருடைய ஜாதகங்களை அலசி ஆராய்ந்தால்தான் தெரியும்....

லக்னாதிபதி 11ம் இடத்தில் இருந்தால் என்ன செய்யும்?


லக்னாதிபதி 11ம் இடத்தில் இருந்தால் என்ன செய்யும்?

11
ம் இடத்தில் இலாபஸ்தானமல்லவா, எனவே இவர் என்ன செய்தாலும், சிலருக்கு லாபம் வந்து கொண்டிருக்கும். இது ஓர் அற்புதமான அமைப்பாகும். பதினோறாம் இடம் மூத்த சகோதர்ரையும், இளைய மனைவியையும் குறிக்கும் இடமாகும். எனவே இங்கு லக்னாதிபதி இருந்தால், இந்த ஜாதகரால் இவரது மூத்த சகோதரர் ஆதாயம் அடைவார். இரண்டாவது திருமணம் செய்திருந்தால், இளைய மனைவி ஆதாயம் அடைவார். அதே நேரத்தில் பதினோன்றாம் இடத்து அதிபர் லக்னத்தில் இருந்தால் முதல் சகோதர்ரால் இந்த ஜாதகர் ஆதாயம் அடைவார். இளைய மனைவியால் ஜாதகர் ஆதாயம் அடைவார். இவ்வாறு இந்த காரகத்துவங்களை ஆய்வு செய்து பலன்களைச் சொல்ல வேண்டும்.

லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?



லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?

பத்தாமிடம் தொழில் ஸ்தானமாகும். இங்கு லக்னாதிபதி இருந்தால், தொழிலால் இவர் ஆதாயம் அடைவார். 10ம் இடத்து அதிபர் லக்னத்தில்
இருந்தாலும், லக்னாதிபதி 10ம் இடத்தில் இருந்தாலும், இவர் செய்கின்ற தொழிலால் இவர் ஆதாயம் அடைவார். எவருடைய ஜாதகத்திலாவது லக்னாதிபதி 9,10,11 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தாலும் அவர் அதிர்ஷ்டசாலி என்று முடிவு செய்து கொள்ளவும்.


லக்னாதிபதி 9ம் இடத்தில் இருந்தால் என்ன?


லக்னாதிபதி 9ம் இடத்தில் இருந்தால் என்ன?

ஒன்பதாம்இடம் பிதுர்ஸ்தானமாகும். இங்கு லக்னாதிபதி இருந்தால், இவரால் இவரது தகப்பனார் ஆதாயம் அடைவார் பாக்யவிருத்தி ஏற்படும். மேலும் ஒன்பதாம் இடத்திற்கு என்னென்ன காரகத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவை அத்தனையையும் இவர் அடைவார். அதே நேரத்தில் ஒன்பதாம் வீட்டு அதிபர் லக்னத்தில் அமர்ந்தால், இந்த ஜாதகர் தந்தையால் ஆதாயம் அடைவார். தந்தையின் ஆதரவு பாசம் பரிபூரணமாக இவருக்கு கிடைக்கும். தந்தையாரின் சொத்தும் கிடைக்கும்