Pages

Wednesday, November 27, 2013

லக்னாதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்?

லக்னாதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்?

லக்னாதிபதியை வைத்து எப்படி பலன் சொல்வது என்று சொல்கிறேன். லக்னாதிபதி ஒன்றாம் வீடான லக்னத்தில் இருந்தால் ஆட்சி பெற்றிருக்கிறார். எனவே பலமாக இருக்கிறார். இப்படி யாருக்காவது இருந்தால், அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்.
லக்னாதிபதி தனஸ்தனமான 2-ம் வீட்டில் இருந்தால் செல்வம் படைத்தவர். எப்படியோ இவருக்கு பணம் வந்து கொண்டிருக்கும். எப்பொழுதும் செல்வச் செழிப்புடன் வாழ்வார். அதே போல, லக்னத்தில் தனஸ்தாணதிபதி இருந்தாலும் செல்வச்செழிப்புடன் காணப்படுவார். இரண்டாம் விட்ட இன்னொரு விதமாக சொல்வார்கள். அதாவது இரண்டாவது விட்டை குடும்பஸ்தானம் என்று சொல்வார்கள். எனவே லக்னாதிபதி 2-ம் விடான குடும்பஸ்தானத்தில் இருந்தால், இவரால், இவரது குடும்பத்திற்கு பணம் வந்து கொண்டிருக்கும், குடும்பத்தை ஆதரிப்பார்.
லக்னாதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் என்ன சொல்வது? 3,6,8,12 ஆகிய வீடுகள் மறைவு ஸ்தானமென்றும், பொதுவாக லக்னாதிபதி மறையக் கூடாது. மறைந்தால் அவருடைய பலம் போய்விடும். இப்பொழுது உங்களால் சுலபமாக பலன் சொல்ல முடியும். இங்கு இவர் மூன்றாவது விட்டில் மறைந்து விட்டபடியால், லக்னாதிபதி பலம் இழந்து விட்டார். எனவே சிலருக்கு செல்வாக்கு இருக்காது. இவர் யாருக்கு எந்த உதவியை செய்தாலும் அவர்கள் இவருக்கு நன்றியாக இருக்க மாட்டார்கள். மூனறாமிடம் என்ன ஸ்தானம்? சகோதர ஸ்தானம் என்றும், தைரியஸ்தானம் என்றும் சொல்வார்கள், லக்னாதிபதி சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் இந்த ஜாதகரால் இவரது சகோதர சகோதரிகள் பலன் அடைவார்கள். ஆனால் அவர்களால் இவர் பலன் அடையமாட்டார். அதே நேரத்தில் மூன்றாம் விட்டு அதிபர் லக்னத்தில் இருந்தால், சகோதர சகோதரிகளால் பயன் பெறுவார்கள்.
லக்னாதிபதி நான்காம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். 4ம் வீடு சுகஸ்தானமாகும். இந்த வீடு வாகனங்களைக் குறிக்கும் இடமாகும். தாயாரைக் குறிக்கும் இடமாகும். எனவே லக்னாதிபதி இங்கு இருந்தால் சுகஸ்தானம் வலுவடையும்.சுகமாக வாழ்வார்கள். தாயைக் காப்பாற்றுவார்கள். லக்னாதிபதி 4ம் விட்டில் இருப்பதால் தான் இவர் தாயை வைத்துக் காப்பாற்றுவார். அதற்கு பதிலாக 4ஆம் வீட்டு அதிபர் லக்னத்தில் இருந்தால் பெற்ற தாயாரால் இவர் ஆதாயமடைவார். சிலருக்கு தாய்வீட்டு சொத்து கிடைக்கும். தாய் இவரை நன்கு கவனித்துக் கொள்வார். வாகனத்தைக் குறிக்க்க் கூடிய 4ம் வீட்டில் லக்னாதிபதி இருந்தால் , வீடு வாகனங்கள் எல்லாம் அமையும். அதேபோல் 4ம் வீட்டு அதிபர் லக்னத்தில் இருந்தால் வீடு வாகனங்களால் ஆதாயம் அடைவார்கள். வீடு, வாகனம், தாய்- இதற்கு மட்டுந்தான் இந்த நான்காம் இடம் காரகத்துவம் பெற்றிருக்கிறது. இன்னும் ஒரு விஷயத்திற்கும் காரகத்துவம் பெற்றிருக்கிறது. 4ம் இடம் வித்தையைக் குறிக்கும் இடமாகும். வித்தை என்றால் கல்வி, நான்காம் இடத்தின் அதிபர் லக்னத்தில் இருந்தால் வித்தைகளால் இவர் ஆதாயத்தை அடைவார். இதை என்னுடைய ஜாதகத்தின் மூலமாகவே விளக்குகிறேன். என்னுடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டு அதிபர் செவ்வாய் ( நான் சிம்ம லக்னம்) லக்னத்தில் அமர்ந்து 4ம் வீட்டைப் பார்க்கிறார். இதனால்தான் நான் பல கலைகளை கற்றுக்கொடுக்க முடிகிறது. ஆதாயம் புகழ் மற்றும் பெயரும் எனக்குக் கிடைக்கிறது..............

No comments:

Post a Comment