Pages

Wednesday, November 27, 2013

மாதங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பு :

மாதங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பு :

சூரிய பகவான் மேஷராசியால் நுழையும் நாளான ஏப்ரல் 14ந் தேதி முதல் இந்த வருடம் ஆரம்பமாகிறது. லீப் வருடத்தில் ஏப்ரல் 13ம் தேதியும் சாதாரண வருடத்தில் ஏப்ரல் 14ம் தேதியும் இந்த வருடம் ஆரம்பமாகும். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசியில் நுழையும் நாளே மாதப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம் என்றும் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் மாதம் வைகாசி மாதம் என்றும் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம்ஆனி மாதம் என்றும் கடகம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம் என்றும் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆவணி மாதம் என்றும் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி மாதம் என்றும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஐப்பசி மாதம் என்றும் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் கார்த்திகை மாதம் என்றும் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதம் என்றும் மகர ராசியில் சஞ்சரிக்கும் மாதம் தை மாதம் என்றும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மாசி மாதம் என்றும் மீன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் பங்குனி மாதம் என்றும் வழங்கப்படுகின்றது. ஒருவர் எந்த மாதத்தில் பிறந்தாரோ அந்த மாதத்திற்குரிய ராசியில் தான் சூரியன் அவருடைய ஜாதகத்தில இருப்பார்.
உதாரணம்:
இந்த சக்கரத்தில் காட்டிய வாறு ஆவணி மாதம் பிறந்தவருடை ஜாதகத்தில் சூரியன் சிம்மத்தில் இருப்பார்.

No comments:

Post a Comment