Pages

Wednesday, November 27, 2013

சுபகிரகங்கள் மற்றும் பாவகிரகங்கள்:

சுபகிரகங்கள் மற்றும் பாவகிரகங்கள்:

கிரகங்களில் சுபகிரகங்கள் இருக்கின்றன. தீய கிரகங்கள் இருக்கின்றன. சுக்கிரன், புதன், குரு, சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது, ஆகிய கிரகங்கள் பாவ கிரகங்கள். ஆக ஒன்பது கிரகங்களில் ஐந்து தீய கிரகங்கள் மட்டும் அமரகூடாது. நான்கு சுபகிரகங்கள் மட்டும் அமரலாம். ஒருவரது லக்னத்தில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால், எப்படி அவர்களை நல்லவர்கள் என்று சொல்கின்றோமோ அதுபோல் சுபகிரகங்கள் இருந்தாலும் அவர்களை நல்லவர்கள் என்றும் சொல்லலாம்.
ஆக, இந்த சுபகிரகங்களில் சந்திரன் லக்னத்தில் இருந்தால், சந்திரனுக்கேற்ற குணாதிசயங்களைச் சொல்ல வேண்டும். சுக்கிரன் இருந்தால், அதற்கேற்ற குணாதியத்தைச் சொல்ல வேண்டும். புதன் இருந்தால் அதற்கேற்ற குணாதியத்தையும், குரு இருந்தால் அதற்கேற்ற குணாதிசயத்தையும் சொல்ல வேண்டும். அந்தந்த சுபகிரகங்களின் குணம் அவர்களது நடத்தையைப் பிரதிபலிக்கும். எப்படி என்று பார்ப்போமா!
ஆக, இந்த சுபகிரகங்களில் சந்திரன் லக்னத்தில் இருந்தால், சந்திரனுக்கேற்ற குணாதியங்களைச் சொல்ல வேண்டும். சுக்கிரன் இருந்தால், அதற்கேற்ற குணாதியத்தைச் சொல்ல வேண்டும். புதன் இருந்தால் அதற்கேற்ற குணாதியத்தையும், குரு இருந்தால் அதற்கேற்ற குணாதியத்தையும் சொல்ல வேண்டும். அந்தந்த சுபகிரகங்களின் குணம் அவர்களது நடத்தையைப் பிரதிபலிக்கும்.


சந்திரன்

முதலில் சந்திரனை எடுத்துக் கொள்ளுங்கள். சந்திரனின் தன்மை என்னவென்றால். சந்திரன் கற்பனையைக் குறிக்கக்கூடிய கிரகம், மனதை, பிரதிபலிக்கும் கிரகம் குளுமையை, பிரதிபலிக்கும் கிரகம். எனவே அத்தனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அந்த காரக்டர் புரிய ஆரம்பிக்கும். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னம் என்று சொல்லப்படும் முதல் வீட்டில் இருந்தால். அவர் கற்பனை வளம் மிக்கவராக இருப்பார். அதாவது அவர் எப்பொழுதும் கற்பனையிலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பார். சந்திரன் மனதைக் குறிக்கக்கூடிய கிரகம்; வெண்மையைக் குறிக்கக்கூடிய கிரகம். எனவே அவர் எப்பொழுதும் வெள்ளை மனதுடன் (அதாவது கள்ளம் கபடம் அற்ற மனதுடன்) இருப்பார். மேலும் சந்திரன் குளுமையான கிரகம் என்பதால், அவரது உடல் குளுமையாக இருக்கும். அவரும் குளுமையாக இருப்பார். ஒன்பது கிரகங்களின் குணங்களை மட்டும் தெரிந்து கொண்டால் போதும், அந்த கிரகங்கள் லக்னத்தில் இருந்தால், அதற்கேற்ப பலனைச் சொல்லிவிட வேண்டும். எனவே அடுத்து சுக்கிரனை வைத்து எப்படி பலன் சொல்வது என்று பார்ப்போம்.

சுக்கிரன் :

சுக்கிரன் என்ற கிரகம் அழகைக் குறிக்கக் கூடிய கிரகம். கலையைக் குறிக்கக் கூடிய கிரகம். சிங்காரத்தைக் குறிக்கக் கூடிய கிரகம். எனவே ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், அந்த ஜாதகர் அழகாக இருப்பார். எதையும் அழகாக வைத்திருக்க விரும்புவார். வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வார்(அதாவது சென்ட் அடித்துக் கொண்டு கமகம என்று திரிவார்). எல்லாவற்றையும் கலைநயத்துடன் ரசிப்பார்! மேலும் சுக்கிரன் இனிமையான கிரகம் அல்லவா! எனவே லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்த ஜாதகரும் இனிமையாகவே இருப்பார். இது போல சுக்கிரனுக்கு என்னென்ன காரகத்துவங்கள்சொல்லப்பட்டிருக்கிறதோ, அத்தனையும் அவருக்கு இருக்கும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன்:

கல்வியைக் குறிக்கக்கூடிய கிரகம் புதனாகும். அதாவது நிபுணத்துவத்தைக் குறிக்கக் கூடியது புதனாகும். எனவே புதன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால், அவர் நிபுணராக இருப்பார். கல்வியாளராக இருப்பார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குரு:

குரு என்ற சுபகிரகம் லக்னத்தில் இருந்தால் என்ன குணாதிசயம் என்னவென்றால் குரு என்பவர் மற்றவர்களுக்கு நீதி நெறிகளை எப்பொழுதும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். நல்லது, கெட்டது அனைத்தையும் அடுத்தவர்களுக்கு advice பண்ணுகின்றவர் குரு ஆவார். மேலும் குரு போதிப்பவரும் ஆவார். எனவே இப்படிப்பட்ட பல குணங்களைக் கொண்ட குரு இவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால், இது போன்ற பலகுணங்கள் அவருக்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு பலன்கள் அனைத்தும் நடக்கவேண்டுமென்றால் அந்த கிரகங்கள் பலம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சந்திரனாகட்டும், சுக்கிரனாகட்டும், புதனாகட்டும், குருவாகட்டும், லக்னத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும். பலம் பெற்றிருக்க வேண்டுமென்றால், லக்னத்தில் அந்த சுபகிரகங்கள் ஆட்சியாக இருக்கலாம். உச்சமாக இருக்கலாம். நட்பாக இருக்கலாம் இவ்வாறு இருந்தால் மட்டுமே பலம் பெற்றிருக்கிறது என்று பொருள். அதற்குப்பதிலாக பகை பெற்றிருந்தாலோ, நீசமாக இருந்தாலோ பலம் பெறவில்லை என்றே பொருள். எனவே கிரகங்களின் குணாதிசயங்களைப் பற்றிச் சொல்லும்பொழுது, பலம் பெறவில்லை என்றால் குணாதிசயங்களின் தன்மை குறைந்து விடும். கிரகங்கள் நீசமாகிவிட்டால், அந்த கிரகங்கள் நீசபங்கம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குரு போன்ற சுபகிரகங்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக குருவின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment