Pages

Wednesday, November 27, 2013

பாவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் கிடைக்கும் பலன்கள்:

பாவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் கிடைக்கும் பலன்கள்:

பாப கிரகங்கள் என்றும் தீய கிரகங்கள் என்றும், குரூர கிரகங்கள் என்றும் சூரியன்,செவ்வாய் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களைச் சொல்வார்கள். இந்த கிரகங்களில் ஒரு கிரகம் இருந்தால், எந்த கிரகம் இருக்கிறதோ, அந்த கிரகங்களின் குரூரத் தன்மை அவர்களிடத்தில் காணப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் லக்னத்தில் இருந்தால், தீய கிரகங்கள் குரூரத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த கண்ணோட்டத்தில் தான் நாம் ஒருவருடைய குணாதிசயத்தை அலச வேண்டும்.
ூரியன்:
சூரியனுடைய தன்மை கிரகங்களிலே அது ராஜகிரகமாகும். எதற்கும் முதன்மை வகிக்கும் தன்மையைக் கொடுக்கும் கிரகமாகும். மேலும் உஷ்ணத்தை, வெப்பத்தை பிரதிபலிக்கும் கிரகமாகும். எனவே சூரியன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால், அவர் எதிலும் முதன்மை வகிக்கும் தன்மையைக் கொண்டவராக இருப்பார். தலைமை வகிக்கும் குணமாக இருப்பார். உஷ்ணத்தேகமுடையவராக இருப்பார். மேலும் அவர் சூடாகவும் இருப்பார். அரசு வேலைகளுக்கு சூரியனைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். எனவே அவர் சூடாகவும் இருப்பார். அரசு வேலைகளுக்கு சூரியனைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். எனவே அரசியலில் ஈடுபட வேண்டுமென்றால் அரசுதுறையில் பெரிய பதவியில் இருக்க வேண்டுமென்றால், லக்னத்தில் சூரியன் பலமாக இருக்க வேண்டும். லக்னம் மட்டுமல்ல, பத்தாமிடத்தில் சூரியன் பலமாக இருந்தாலும் அரசியல்வாதியாக பிரகாசிக்க முடியும். அல்லது அரசுத்துறையில் உயர்பதவியில் பிரகாசிக்க முடியும். இப்படி நாம் சூரியனை வைத்து முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment