Pages

Saturday, November 16, 2013

ஏழாம் பாவம் பலன்


7மிடத்தில் சூரியன் இருந்தால் 
அரச விரோதம் களத்திர தோஷம் அவமானம் ஆகியவைகளை அடைவான் அழகான கலத்திரத்தை அடைவான் ஆனால் இரண்டில் இருப்பாவன் தசையில் தனது புக்தியில் களத்திர நாசத்தையடையவன் 


7மிடத்தில் சந்திரன் இருந்தால் 
எடுத்த காரியத்தில் பிடித்ததொன்றைச் சாதிப்பான் சாந்தகுணமும் அதிக சுகமும் உடையவன் ஆவன் மகர லக்கினத்திற்கு 7ல் சந்திரன் தனித்து சுபர் பார்வையின்றி இருந்தால் திருமணத்தின் போது தாய் மரணமாவாள் 


7மிடத்தில் செவ்வாய் இருந்தால் 
தாரத்தைப் பிரிவான் வழி நடந்து அலுப்பவன் ரோக பீடிதம் உள்ளவன் தகுதியில்லாதவன் ஆவன் என்க 


7மிடத்தில் புதன் இருந்தால் 
யாவும் அறிந்தவன் அலங்க்காரப்பிரியன் சகல மகிமையுள்ளவன் தன பாக்கியமுள்ள மனைவியை உடையவன் படித்த கர்வமுள்ள மனைவியைப் பெறுவான் 


7மிடத்தில் குரு இருந்தால் 
நல்ல குணமுள்ள பத்தினி புத்திரப் பேறு பெரும் பாக்கியம் தந்தையைவிட மேன்னையுடனிருக்கை ஆகிய இப்பேருகளைப் பெறுவான் 


7மிடத்தில் சுக்கிரன் இருந்தால் 
மனைவியோடு கூடிவாழ்வான் ஈன ஸ்திரீகளிடம் காம இச்சையுள்ளவன் களத்திர தோஷம் உடையவன் ஆவன் என்க 


7மிடத்தில் சனி இருந்தால் 
துன்மார்க்கத்தில் செல்லும் களத்திரம் உடையவனாய் இருப்பான் தரித்திரன் வழிநடப்போன் ஷ்வாதீனற்ற இந்திரியங்கள் ஆகியவற்றோடு கூடியவன் ஆவன் என்க 


7மிடத்தில் ராகு இருந்தால் 
களத்திர தோஷமுடையவன் பெண்கள் சகவாசத்தால் தனநாசமும் பலமின்மையும் ஸ்வதந்திரமும் அற்ப புத்தியும் உண்டாகும் 


7மிடத்தில் கேது இருந்தால் 
களத்திர தோஷம் உண்டு தன் களத்திரத்தைப் பிரிவான் அவமானம் துஷ்டத்தனமுள்ள ஸ்திரீகளின் சேர்க்கை ஆகியவை உண்டு 
  

No comments:

Post a Comment