Pages

Friday, February 28, 2014

தாலிக்கயிற்றில் தொங்கவிடக்கூடாதது என்ன?



பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்

மருத்துவ சிகிச்சைக்கு உகந்த ஓரைகள்



நாடி ஜோதிடத்தில் குரு, சுக்கிர சேர்க்கைக்கு சஞ்சீவினி யோகம் என்று பெயர். ஒருவருடைய ஜாதகத்தில் சஞ்சீவினி யோகம் இருந்தால், அவருக்கு என்ன வியாதி வந்தாலும் எப்படியாவது குணமாகிவிடுவார். நாடி ஜோதிட விதிகளின் படி குருவுக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12ல் சுக்கிரன் இருந்தால் அது சஞ்சீவினி யோகமாகும். இது போன்ற கிரக அமைப்பு வருடத்தில் 8 மாதங்கள் வரைக்கும் இருக்கும். இந்த காலங்களில் மருந்து சாப்பிட நோய்கள் விரைவில் குணமாகும். மற்ற 4 மாதங்களில் மருந்துகள் அதிக பலன் தராது. இந்த கிரக சேர்க்கைக்குரிய பலன்களை வாராதிபதியும் ஓராதிபதியும் இணையும் நேரங்களிலும் அடையலாம். இதன்படி வியாழக்கிமை சுக்கிர ஓரையில் அல்லது வெள்ளிக்கிழமை குரு ஓரையில் மருந்து சாப்பிட, நாள் பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.

Saturday, February 22, 2014

வெளிநாட்டு யோகம்;


வெளிநாட்டில் படிப்பத‌ற்காகவும், தொழில் அல்லது வேலை நிமித்தமாகவும், ஊர் சுற்றிப் பார்க்கவும் செல்லுவோர் ஜாதக‌ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என பார்ப்போமா?

*குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கெடாது, வலுவாக(ஆட்சி, உச்சம், நட்பு, சுபர் பார்வை அல்லது சேர்க்கை) இருக்க வேண்டும்.

*குரு, சனி( வாயு கிரகங்கள்), சந்திரன், சுக்கிரன்( நீர் கிரகங்கள்) ஆகியோர் கெடாது நீர் ராசிகளில்(கடகம், விருச்சிகம், மீனம்) அமைந்தால் வெளிநாட்டு யோகம் அமையும்.

*9, 12க்குடையவர்கள் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தப்பட்டால் வெளிநாடு சென்று வரலாம்.

*ராகு - கேதுக்கள் 3,6,11 ஆமிடங்கள் மற்றும் 5,7,9 ஆமிடங்கள்(3-9,6-12,5-11,1-7 என அமர்ந்திருப்பது) நின்றாலும் வெளிநாட்டு யோகம் அமையும்.

Tuesday, February 18, 2014

தனஸ்தானம்


சூரியனுக்குத் தனாதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டால் லோக பரோபகாரம் செய்வதில் சமர்த்தனாகவும் வித்தை தனம் இவைகளை உடையவனாகவும் இருப்பன் என்க

சந்திரனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் கலாசாஸ்திர விற்பன்னனாவான்

அங்க்காரகனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் குரூர கலா சாஷ்த்திரத்தில் விற்பன்னனாவான் மேலும் கோள் சொல்வதில் சமர்த்தனாவான்

புதன்க்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் அர்த்த சாஷ்திரத்தில் சமர்த்தனாவான்

குருவிற்குத் தானாபதி சம்மந்தமேற்பட்டால் வேதம் சாஸ்திரம் இவைகளில் நிபுணனாகவும் தருமகர்த்தாவாகவும் இருப்பான்

சுக்கிரனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால்அழகிய வார்த்தையாடுவான்


சனிக்குத் தணாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் அற்ப வித்தையில் ஆசையுடையோனாவான்

இராகுவுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் ஸ்பஷ்டமில்லாமல் அழகாகப் பேசுவான்

கேதுவுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் குளறுவாயனாகவும் பொய் பேசுபவனாகவும் இருப்பான்

மேற்சொன்ன கிரகங்கள் சுபசம்மந்தம் பெறின் சுபமாயும் அசுப சம்மந்தம் பெறின் அசுபமாயும் இருக்கும்

2வது பாவாதிபதியும் 3வது பாவதிபதி இலக்கினத்திலிருந்தால் சகோதரரால் தேடப்பட்ட தனத்தை அடைவான் அவ்வாறே 2வது பாவாதிபதியும் 4வது பாவாதிபதியும் இருந்தால் தாயால் தேடப்பட்ட தனத்தை அடைவான் அதாவது 2வது பாவாதிபதி எப்பாவாதிபதியுடன் இலக்கினத்தில் இருக்கிறானோ அந்த பாவம் மூலமாய் ஜாதகனுக்கு தனம் சேரும்

இலக்கின பாவமும் 2வது பாவமும் பரிவர்த்தனமானால் அதிகப் பிரயாசையில்லாமல் ஜாதகனுக்கு தனம் வந்து சேரும்

இரண்டாவது பாவத்தில் சந்திரனிருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சிறந்த கொடையாளி

இரண்டாவது பாவத்தில் புதன் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சர்வசதாகாலமும் தன்னிடம் தனம் வத்துக்கொண்டெயிப்பான்

இரண்டாவது பாவாதிபதி எந்த திக்கில் இருக்கின்றாரோ அந்த திக்கில் 2வது பவாதிபதியின் தசையில் ஜாதகன் விசேஷ விருத்தியடைவான் இக்கிரகம் நேர்கதியில் சென்றால் மேற்சொன்ன திக்கில் தனம் சம்பாதிப்பான் வக்கிரகதியில் இருந்தால் எல்லாத் திக்குகளிலும் ஜாதகன் தனம் சம்பாதிப்பான்

2,11 வது பாவாதிபதி பரிவர்த்தனமானாலும் அப்பாவாதிபதிகள் இலக்கின கேந்திரங்களிருந்தால் ஜாதகன் சிறந்த தனவான்

 தனகாரகன் குரு 12வது பாவாதிபதிகள் 2வது பாவாதிபதி பலவீனனாயிருந்து இலக்கினத்தைச் சுபர் பாராமலிருந்தால் ஜாதகனுடைய தனம் நாசமாகும்

சூரியனும் சனியும் 2வது பாவத்திலிருந்தால் ஜாதகன் தரித்திரனாவான்

2வது பாவாதிபதியும் குருவும் 8வது பாவத்திலிருந்தால் ஜாதகன் ஊமையாவான் ஆனால் 2வது பாவாதிபதி உச்சமானால் இத்தொஷம் கிடையாது

குரு கேந்திர திரிகோனங்களிலிருந்து புதன் 2வது பாவாதிபதியாகி உச்சஷ்தானத்தில் இருந்தாலும் அல்லது சுக்கிரன் உச்ச ஷ்தானத்திலிருந்தாலும் ஜாதகன் கணித வித்தை தெரிந்தவன்

2வது பாவத்தில் செவ்வாய் சுபருடன் கூடியிருந்து புதன் இவர்களைப் பார்த்தால் அல்லது கேந்திர பாவத்திலிருந்தாலும் ஜாதகன் கணித வித்தை தெரிந்தவன்

2வது பாவதிபதியும் இலக்கினாதியும் சனியும் சம்மந்தப் பட்டு இருந்தால் எவர்சில்வர் அலுமினிய பாத்திரங்களில் உண்பான்

2வது பாவத்தில் செவ்வாயிருந்து பாபரால் பார்க்கப்பட்டால் ஜாதகன் கெட்ட உணவை உண்பான்

2வது பாவத்தில் சுபர் இருந்து 2வது பாவாதிபதி சுபருடன் கூடியிருந்து 2வது பாவம் அல்லது 2வது பாவாதிபதி அல்லது இவைகள் இரண்டும் சுபரால் பாக்கப்பட்டால் ஜாதகன் நல்ல உணவை உண்பான்

Friday, February 14, 2014

துறவியாகும் அமைப்புள்ள ஜாதகம் எது?


1.ஜாதகத்தில் சந்திரன் சனி சேர்க்கை இருந்தால் மனம் ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
2.ஜாதகத்தில் 10 ம்மிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் அவர் ஆன்மீக ஞானியாவர்.
3.மகரம்,கடகம், துலாம் சிம்மம் ஆன்மீகம் வாழ்வுக்கு ஏற்ற இராசிகளாகும்.

அரசியலில் MP ..MLA ஆகும் அமைப்பு யாருக்கு?



1.ஜாதகத்தில் 7,9 ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றால் 28 வயதுக்கு மேல் MP,MLA ஆகும் அமைப்பு உண்டு.

2.ஓருவர் ஜாதகத்தில் 4,9 இடங்கள் அபஸ்தானமாக இருந்தால் அந்த அதிபதிகள் ஓரே ராசியில் இனைந்தால் அதிகாராம் செல்வாக்குடன் கூடிய அரசியல்வாதி.

3.பஞ்சாமாபுருஷயோகமான ருச்சச யோகம் அமைந்து சூரியனும் ஆட்சீ.,உச்சம் பெற்று செவ்வாய் திசை நடைமுறையில் இருந்தால் ஜாதகர் வீரமான முழக்கம் செய்யும் ஜாதிகட்சி அரசியல்வாதி.

வசதியான கணவன் யாருக்கு?



1.பெண் ஜாதகத்தில் இயற்கை சுபர்களான வளர் பிறை சந்திரன்,குரு,சுக்கிரன் இவற்றுள் ஏதேனும் ஒன்று பலம் பெற்றால் வசதியான கணவன் கிடைப்பான்.

2.கன்னி, துலாம், மிதுனம் 7ம் இடமாக வந்தால் செல்வந்தன் கணவனாக கிடைப்பான்.

3.கன்னி இலக்னத்திற்கு இலக்னத்தில் புதன் உச்சம் பெற்று 11,ல் குரு உச்சம் பெற்றால் அழகும்,பணமும் உடையவன் கணவனாக கிடைப்பான்.

எவர் பயந்தாங்கொள்ளி?





1. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் வலு குறைந்து காணப்பட்டால் அவர் பயம் கொண்ட மனம் உடையவர்.

2.12ம் அதிபதி நீசம் பெற்றால் பயமும், கவலை கொண்ட மனம் உடையவர்.

3.இலக்னாதிபதி சுபராகி பலம் இழந்தால் கவலை மனம் கொண்டவர்.

தந்தை மகன் உறவு எப்படி?



1.ஒருவரின் ஜாதகத்தில், சந்திரனுக்கு 9ம் இடத்தில்,சனி அமர்ந்தாலோ, அல்லது 9ல் சனி சுபர் பார்வையின்றி தனித்து இருந்தாலோ, தந்தையை விட்டு பிரிவார்.

2.சந்திரன், கேது சேர்க்கை 11,4,அமர்ந்தால் தாய், தந்தையை பிரிவார்.

3.குழந்தையின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 11ல் சந்திரன் அமைந்தால் அதை சுபர் பார்வையிட்டால் தந்தையை விட்டு வேறு நபரிடம் குழந்தை வளரும்.

கிரங்கங்கள் செய்யும் அனுக்கிரங்கள்



கிரகங்கள் செய்யும் அனுக்கிரங்கள்
சூரியன்- உடல்நலம், அறிவு, ஆன்மவிருத்தி
சந்திரன்- புகழ், பெருமை, அழகு, மனநலம்
செவ்வாய்- செல்வம், வீரம் இரத்தவிருத்தி
புதன்- கல்வி, அறிவு
குரு- (வியாழன்)- நன்திப்பு, செல்வம்
சுக்ரன்(வெள்ளி)- அழகு, நாவன்மை, இன்பம்
சனி- மங்களங்கள், மகிழ்ச்சி, செயலாற்றல்
ராகு- எதிரிபயம் நீங்கல், காரிய சித்தி
கேது- குல அபிவிருத்தி, ஞானம், முக்திபேறு

காதல் திருமணம்.

ஐந்தாம் அதிபதி ஏழில் அல்லது ஏழாமதிபதி ஐந்தில் இருந்தால் காதல் திருமணம்.


ஒன்பதாம் அதிபதி அல்லது குரு கெட்டால் சமுதாய கட்டுப்பாடு மீறி காதல்.


7ம் பாவம் 9ம் பாவம் சம்பந்தம் காதல் திருமணம். ( PAC ).


1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு காதல் திருமணம். பாவாதிகள் கெட்டுவிட்டால் காதல் திருமணம் தடைபடும்.


செவ்வாய், சுக்ரன் தொடர்பு மற்றும் 1, 5, 7 வீடு தொடர்பு காதல் திருமணம்.


ஆண்/பெண் இருவரின் சுக்ரன், செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்து கொள்வர்.


7ம் அதிபதியும் சுக்ரனும் சனியினால் பார்க்கப்பட்டால் கட்டாயம் காதல் திருமணம்.

7ல் ராஹு/கேது, சந்த்ரன், புதன் இருந்தால் காதல் ஏற்படும்.


பொதுவாக ரிஷபம், கடகம், சிம்ஹம், துலாம், மீனம் ராசிகள் காதல் வயப்படும் ராசிகள் ஆகும்.


1ம் அதிபதி 5ம் அதிபதி பார்வை, சேர்க்கை இருந்தாலும்


1ம் அதிபதி 5ம் அதிபதி பரிவர்த்தனை ஆனாலும் காதல்


வலுவான சந்த்ரன், செவ்வாய் மற்றும் சுக்ரன் 5ல் இருப்பது அல்லது ஐந்தைப் பார்த்தாலும்


கேது, புதன் சேர்க்கை


5, 7ம் அதிபதிகள் லக்னத்தில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அல்லது பரிவர்த்தனை


5ம் அதிபதியுடன் செவ்வாய் தொடர்பு.

காதல் திருமணமாக ஜாதகத்தில்
சுக்கிர பலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .
ஒருவர் மீது ஒருவர்
அதீதமான அன்பு கொள்ளச் சுக்கிரன் உதவுவார். இனக்
கவர்ச்சியும் சுக்கிரனால்
உண்டாகும். அன்பு , காதல் , பாசம் , நேசம் , இனிமையான
பேச்சு , உல்லாசம் , சுகம் ,
காமம் , மனஉற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட
சுக்கிரனே காரணகர்த்தா ஆவார் .
சுக்கிரன்
மீனம், ரிஷபம் , துலாம் ஆகிய ராசிகளில்
இருப்பது சிறப்பாகும் .
பரணி ,
பூரம் , பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து,
நட்சத்திர நாயகன்
சுக்கிரன் ஆட்சி , உச்சம் பெற்றிருந்தால் பலம்
கூடும் .
சுக்கிரன் சுப
பலம் பெற்று , களத்திர ஸ்தானாதிபதியாகிய 7 ஆம்
வீட்டோனும் பலம் பெற்று ,
குரு மறைவு ஸ்தானம் பெற்று , குறிப்பிட்ட தசை,
புக்தி நடப்பவர்களுக்குக்
காதல் திருமணம் ஆகும் .
சுக்கிரனும் 7 ஆம் வீட்டோனும் லக்னத்திற்கு 5
ஆம் இடத்தில் இருப்பது விசேடமாகும்.
ஒரு பெண் ஆணிடமோ, ஆண்
பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத்
துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை
வழங்குபவர் செவ்வாய் ஆவார் . இதனால் காதல்
திருமணத்துக்குச் செவ்வாயின்
பலமும் அவசியம் தேவை .
செவ்வாய் ஆட்சியாக மேஷ, விருச்சிகத்தில்
இருந்தாலோ , மகரத்தில் உச்சமாக இருந்தாலோ , 3 ஆம்
இடத்தில் வலுத்திருந்தாலோ
மனத்துணிவு உண்டாகும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட
நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மனத்
துணிவு இருக்கும்.
செவ்வாயின் பலமும் சேருமானால் இரட்டிப்பு பலம்
அமையும்.
பூர்வ
புண்ணியம் என்பதும் அவசியமாகும். இதற்கு 5 ஆம்
இடமும் , 5 ஆம் வீட்டுக்கு
அதிபதியான கிரகமும் வலுத்திருக்க வேண்டும்.
மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன்
ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும் .
கன்னியா
ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே , " கன்னி "
இருப்பதால் கன்னிப் பெண்களின்
நட்பு எளிதாக அமைந்துவிடும்.
பேச்சு சாதுர்யமும் இருக்கும். இவர்களுக்கு
சுக்கிர பலமும் கூடியிருக்குமானால்
இரட்டிப்பு பலம் உண்டாகும். கன்னியா
ராசிக்கு 7 ஆம் இடம் மீனம் ஆகும் . களத்திர ஸ்தானம் .
மீனம் சுக்கிரன் உச்சம்
பெறும் வீடாகுமல்லவா? இதனால் கன்னியா ராசியில்
பிறந்தவர்களுக்குக் காதல்
கைகூடும்.
சுக்கிரனின் எண்ணான 6 , 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு அதிகம் உண்டு .
5
ஆம் வீட்டோன், 7 ஆம் வீட்டோன் , சுக்கிரன், செவ்வாய்
ஆகியோரது பலம்
பெற்றவர்கள் காதல் திருமணம்
செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் .
இவர்களது காதல் பல்லாண்டுகள்
நீடித்து நிலைத்து இருக்கும்.

Tuesday, February 11, 2014

இலக்கின ஸ்தானம்

இலக்கினாதிபதி சுப சம்மாந்தமானால் பொன்விளையும் கிராமத்திலாவது சகல வசதிகள் கொண்ட பட்டணத்திலாவது இருப்பான்

இலக்கினாதிபதி பலத்த கிரகத்தோடு குடியிருப்பின் அரசவேலை செய்வான்

இலக்கினாதிபதி உச்சமானால் சிறப்பாக தான் இருக்கும் நிறுவனத்தை நிர்வாகம் செய்வான்

இலக்கினாதிபதி ஆட்சியிலிருந்தால் ஜன்ம பூமியிலேயே இருப்பான்

இலக்கினாதிபதி சர ராசியிலிருந்தால் சதா சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பான் ஓரிடத்தில் நிலையாக இருந்து ஜீவனம் செய்யமாட்டான்

இலக்கினாதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் ஓரிடத்தில் நிலையாக இருப்பான்

இலக்கினாதிபதி உபய ராசியில் இருந்தால் இரண்டு இடங்களில் வாசஸ்தலம் பெற்றிருப்பான்

இலக்கினாதிபதி சுபரோடு கூடி சுபஷ்தானங்களான கேந்திர திரிகோணங்களிலிருந்தால் சுகியாகவும் தினம் தினம் விருத்தியடைவோனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி அசுபரோடு கூடி சுபஷ்தானங்களான 6,8,12 மிடங்களிலிருந்தால் துக்கியாகவும் துக்கிகளால் காப்பார்ரப்பட்டவனாகவும் இருப்பன்

இலக்கினாதிபதி நீசம் பெற்றிருந்தால் இழிவான ஸ்தானத்தில் இருப்பான்

இலக்கினாதிபதி பலவானாய் உபய ராசியிளிருந்தால் சுக ஜீவியாகவும் பலமுடையவனாகவும் விருத்தியடைவொனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி பலவீனனாயிருந்தால் அடிக்கடி துபப்படுவொனாகவும் துக்கியாகவும் பீடையுடைவனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி இருக்கும் பாவத்திற்குப் பன்னிரெண்டாவது பாவாதிபதி இலக்கினாதிபதிக்குச் சத்துருவானாலும் அல்லது இலக்கினாதிபதி இருக்கும் பாவத்திற்குப் பன்னிரண்டாவது பாவாதிபதி நீசமானாலும் பலவீனனானாலும் ஜாதகன் அந்நிய தேசத்திற்குப் போய்விடுவான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி சுக்கிரனுக்கு மித்துருவாகில் அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகன் அந்நிய தேசத்திலேயே நிலையாகத் தங்கிவிடுவான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி அஸ்தங்கதம் அடைந்திருந்தால் ஜாதகன் அந்த அந்நிய தேசத்தில் ஒரு குக்கிராமத்தில் இருப்பான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி பலமுடையவனாய் இருந்தால் ஜாதகன் அந்த அந்நிய தேசத்தில் பெரிய பட்டணத்தில் இருப்பான்

இப்பன்னிரெண்டாவது பாவதிபதி ஆட்சி உச்சம் மித்ரு க்ஷேத்திரங்களிலிருந்து தனக்கு இரண்டு பக்கமும் சுக்கிரகங்க்கலிருந்தால் ஜாதகன் தன் மனத்திற்கிஷ்டமான தேசங்களுக்குப் போய்க் கொண்டே இருப்பான்


இலக்கினாதிபதி இரண்டு பாபக்கிரகங்களுக்கு மத்தியிலிருந்தால் ஜாதகன் எதிரிகளுக்குப் பயந்திருப்பான்

Monday, February 10, 2014

ராகு கேது தோஷம்


ஸ்திரீ புருஷ ஜாதகங்களில் 5,7,மிடங்களில் ராகு கேது இருந்தால் புத்திர தோஷமும் களத்திர தோஷமும் ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு 5,7மிடங்களில் ராகு கேது உள்ள ஜாதகங்கள் சேர்க்கப்பட வேண்டும் இவ்வகையில் அமையாவிட்டால் 7மிடம் சனி அல்லது செவ்வாய் பார்வை பெற வேண்டும்

ஸ்திரீ புருஷ ஜாதகங்களில் 2,8மிடங்களில் ராகு கேது இருந்தால் களத்திர தோஷமும் மாங்கல்ய தோஷமும் ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு 2,8மிடம் ராகு கேது தனித்து உள்ள ஜாதகங்கள் சேர்க்கக் கூடாது சேர்த்தால் புருஷனுக்குக் அற்ப ஆயுள் ஏற்படும் ராகு கேதுக்கள் சுபர் சம்மந்தம் பெற்றால் இவ்வகைத் தோஷமில்லை

மேஷம் ,கடகம் சிம்மம் ,விருச்சிகம் ,தனுசு ,மீனம் ஆகிய இலக்கினத்தை அடைந்தவர்க்கு ராகு கேதுக்கள் குரு சம்மந்தம் பெற்றால் ராகு கேதுவினால் ஏற்படும் எவ்வகைத் தோஷமுமில்லை

அதுபோல் ரிஷபம் ,மிதுனம் ,கன்னி ,துலாம் ,மகரம் ,கும்பம் ,இலக்கினத்தை அடைந்தவர்களுக்கு ராகு கேதுக்கள் சுக்கிர சம்மந்தம் பெற்றால் ராகு கேதுவினால் ஏற்படும் எவ்வகைத் தோஷமுமில்லை

சனி தோஷம்


ஸ்திரீ அல்லது புருஷனுக்கு 7மிடத்தில் சனி இருந்தால் தன்னைவிட மூத்த வரன் அமையும் அல்லது விதைவைகளால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் சுபர் பார்வை பெற்ற சனியால் மேற்கண்ட தோஷம் கிடையாது

ஸ்திரீ அல்லது புருஷனுக்கு 2மிடத்தில் சனி இருந்தால் தாமதமான திருமணம் ஏற்படும் அச்சனியானவர் இலக்கினாதிபதிக்குச் சுபரானால் தாமதமானாலும் சுபமான திருமண வாழ்க்கை அமையும்

ஸ்திரீ அல்லது புருஷ ஜாதகத்தில் 5மிடம் சனி இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும் அல்லது தாமதமாகக் குழந்தை பிறக்கும் இவ்வகை ஜாதகங்களுக்குப் புத்திர தோஷமில்லாத ஜாதகம் சேர்க்க வேண்டும்


ஸ்திரீ அல்லது புருஷ ஜாதகத்தில் 8 மிடம் சனி இருந்தால் குடும்பத்தில் சிறிது காலம் குழப்பம் ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு குடும்ப ஸ்தானம் சுபசம்மந்தமுள்ள ஜாதகம் இணைக்க வேண்டும்

ஸ்திரீ அல்லது புருஷ ஜாதகத்தில் 9மிடம் சனி இருந்தால் தந்தைக்கு மிகுந்த துக்கம் கொடுத்துத் திருமணம் நடைபெறும்

Friday, February 7, 2014

சுக்கிர தோஷம்


சுக்கிர தோஷம் புருஷர்களுக்கு மிக முக்கியமானது புருஷனுக்கு 2,7 ஆகிய இவ்விடங்களில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு 8மிடம் சுபர் சம்மந்தம் பெற்ற ஜாதகத்தை இணைக்க வேண்டும்
சுக்கிரன் மனத காம களியாட்டங்களுக்கு அதிபதி ஆகவே ஒருவருக்கு சுக்கிரன் நீசமாகவும் மற்றவருக்கு சுக்கிரன் உச்சமாகவும் உள்ள ஜாதகங்கள் சேர்க்கக் கூடாது

சுக்கிரன் -செவ்வாய் சேர்க்கை அல்லது பார்வை பெறுவது காமத்தில் நிபுணத்துவம் கொடுக்கும் ஆகவே ஸ்திரீக்கு இவ்வாறு இருந்தால் புருஷனுக்கும் இவ்வாறு இருக்க வேண்டும் இல்லையேல் பரபுரிஷ நாட்டம் அல்லது பர ஸ்திரீ நாட்டம் ஏற்படும்

2 மிடம் அசுபமாகி சூரியன் -சுக்கிரன் சேர்க்கை 2,4,10 மிடங்களில் இருந்தால் தம்பதிகளைப் பிரிக்கும் இவ்வகை ஜாதகங்களுக்கு 2 மற்றும் 7மிடங்கள் சுப சம்மந்தமுள்ள ஜாதகத்தைச் சேர்க்க வேண்டும்

குரு தோஷம்


ஸ்திரீகளுக்கு 7மிடம் குருவும் புருஷர்களுக்கு 7மிடம் சுக்கிரனும் இருந்தால் களத்திர தோஷம் உண்டு இவ்வகை ஜாதகங்களுக்கு 8மிடம் சுபர் சம்மந்தமுள்ள ஜாதகம் சேர்ப்பிக்கப்பட வேண்டும்

ஸ்திரீ ஜாதகத்தில் குரு இருக்கும் ராசிக்கு 6,8 ஆகிய இவ்விடங்களில் புருஷ ஜாதகத்தில் குரு இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்

புத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்கு புத்திரதோஷம் உள்ள ஜாதகம் சேர்க்கக் கூடாது ஆனால் களத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்குக் களத்திர தோஷமுள்ள ஜாதகம் சேர்ப்பிக்கப்பட வேண்டும்

குரு பாதகாதிபயாகி மிடம் பாபக்கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு இரண்டாமிடம் சுபர் சம்மந்தம் பெற்ற ஜாதகம் சேர்ப்பிக்கப்பட வேண்டும்

ஸ்திரீ ஜாதகத்தில் குரு பாதகாதிபதியாகி 4மிடம் இருந்து அவர் தசையில் மாமியாரால் கொடுமை ஏற்படும் இவ்வகை ஸ்திரீ ஜாதகத்திற்குப் புருஷ ஜாதகத்தில் இரண்டாமிடம் மற்றும் பத்தாமிடத்தில் பெண்கிரகங்களான சுக்கிரன் சந்திரன் ஆகிய இவைகள் இல்லாதிருக்க வேண்டும் அல்லது மாமியார் இல்லாத ஜாதகத்திற்குக் கொடுக்க வேண்டும்

Thursday, February 6, 2014

புதன் தோஷம்


இரண்டாமிடம் புதன் சந்திரன் சேர்ந்து இரண்டுக்குடையவன் துர்த்தானங்களில் இருந்தால் கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படும் இவ்வகை ஜாதகங்களுக்கு சந்திரன் ஏனைய சபர்களான குரு சுக்கிரன் ஆகிய இவர்களில் ஒருவருடன் சேர்ந்து இரண்டாமிடத்ததிபன் சுபர் சம்மந்தம் பெற்று சுபஷ்தானங்களை அடைந்த ஜாதகத்தைச் சேர்க்க வேண்டும்

இரண்டாமிடம் சந்திரன் புதன் சேர்க்கையால் குடும்பத்தில் பெண்களால் குழப்பம் ஏற்படும் சிலசமயம் விவாகரத்து வரை ஏற்படும் ஆகவே மேற்கூறிய வழிகளில் ஜாதகம் சேர்க்கப்பட வேண்டும்

இரண்டாமிடம் செவ்வாய் புதன் சேர்ந்து இவர்களின் தசையில் விவாகம் செய்யக் கூடாது

உதாரணம்
மகரலக்கினத்திற்கு இரண்டாமிடம் புதன் செவ்வாய் சேர்க்கப் பெற்று இருந்தால் செவ்வாய் அல்லது புதன் தசையில் விவாகம் செய்தால் சம்மந்திகளுக்குள் சண்டை ஏற்படும் சுபர் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் மேற்படி தோஷம் கிடையாது

பெண்ணுக்கோ ஆணுக்கோ இலக்கினத்தில் புதன் துர்த்தானாதிபதியாகி தனித்து இருந்தால் நல்ல மாங்கல்ய பலன் அல்லது ஆயுள் உள்ள சேர்க்கப்பட வேண்டும்

Wednesday, February 5, 2014

செவ்வாய் தோஷம்


செவ்வாய் ஸ்திரீ ஜாதகங்களில் 2,4,7,8,12 இவ்விடங்களில் இருந்தால் புருஷனுக்கு ஆகாது .இவ்விதம் புருஷ ஜாதகங்களில் இருந்தால் பெண்ணுக்கு ஆகாது .இது பொதுவிதி .
புருஷ ஜாதகத்தில் 2,7,8 ஆகிய இவ்விடங்களிலும் ஸ்திரீ ஜாதகத்தில் 4,8,12 ஆகிய இவ்விடங்களிலும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு இது சிறப்பு விதி

தோஷ பரிகாரங்கள்
1)இரு திரத்தார்கட்கும் மிதுனம் -கன்னி ஆகிய இவ்விடங்கள் இரண்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது .
2)ரிஷபம் -துலாம் ஆகிய இவர்றிலோன்று பன்னிரண்டாமிடாகி அதில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது .
3)மேஷம் -விருச்சிகம் ஆகிய இவரறிலோன்று நான்காமிடமாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை
4)மகரம் -கடகம் ஆகிய இவர்றிலோன்று எழாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை
5)தனுஷ் -மீனம் ஆகிய இவர்றிலோன்று 8மிடம்மாகி அதில் செவ்வாய் இருந்தால்  தோஷமில்லை
6)கும்பத்திலாவது -சிம்மத்திலாவது செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது
7)செவ்வாய் சந்ரனுடன் சேர்ந்தாலும் குருவுடன் சேர்ந்தாலும் கிடையாது
8)செவ்வாய் புதன் -சந்திரன் -சுக்கிரன் -குரு ஆகிய ஒருவரோடு கூடியாவது அல்லது அவர்கள் அவர்கள் பார்வை பெற்றாவது இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது
9)செவ்வாய் இருக்கு ராசிநாதன் செவ்வாய்க்குக் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் செவ்வாய் தோஷமில்லை
10)சந்திர சூரிய ராசிகளான கடக -சிம்ம லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை
11)ஸ்திர -சர ராசிகளான சிம்ம -மேஷ -விருச்சி -மகர எவ்வகைத் தோஷமுமில்லை

ஜனன இலக்கினம் சந்திரஇலக்கினம் சுக்கிர இலக்கினம் ஆகிய பல இலக்கினங்கள் இருந்தாலும் ஜெனன இலக்கினத்தைக் கொண்டே செவ்வாய் தோஷம் கற்பிக்கப்பட வேண்டும்
செவ்வாய் தோஷம் பரிகாரம் ஆகியருந்தாலும் 2,7,8 ஆகிய இடங்களில் செவ்வாய் தனித்து இருந்தால் சூரியனுக்குச் சமமாக பலன்கள் கூறிட வேண்டும் இவ்விடங்களில் சூரியன் இருப்பது போல் பாவித்து சூரிய தோஷத்திற்குச் சொல்லிய பிரகாரம் ஜாதகம் சேர்ப்பிக்கப்பட வேண்டும்
பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ள பெண் அல்லது ஆணுக்கு 2,8மிடம் சுபமாகி 2,8 மிடம் சுபர் பார்வை பெற்று உள்ள ஜாதகம் சேர்க்கப்பட வேண்டும் அவ்வாறின்றி இருவருக்கும் செவ்வாய் தோஷமிருந்தால் அவர்கள் வாழ்க்கை பலவழிகளிலும் துன்புறும்

Tuesday, February 4, 2014

தங்கஆபரணங்கள் கிடைக்கும் அமைப்பு:



1. சுக்கிரன் 3 ம் அமர்ந்தால் தங்க ஆபரணங்கள் அதிகம் கிடைக்கும்.
2.3க்குரியவர் ஆட்சி உச்சம் பெற்றால் உடலில் ஆபரணம் அதிகம் கிடக்கும்.
3. சுப கிரகங்கள் 3ல் இருந்தால் உடலில் ஆபரணம்
நிச்சயயம் உண்டு.

Monday, February 3, 2014

சந்திரதோஷம்


சந்திர தோஷம் உள்ள ஜாதகத்தால் தாயையும் மனைவியையும் இழந்த துக்கமுன்டாகும் .
ஸ்திரீ ஜாதகத்திலாவது புருஷ ஜாதகத்திலாவது சந்திரன் 6,8,12 இவ்விடங்களில் அசுபருடன் சேர்ந்து இருந்தாலும் மூட நீச க்ஷேத்திரங்களில் சுபர் சம்மந்தம் இன்றி இருந்தாலும் ஜாதகி /ஜாதகர் குரூர குனமுடையவாவார் இவ்வகை ஜாதங்களுக்கு இரண்டாமிடம் சுபர் சம்மந்தம் பெற்ற ஜாதகங்களைச் சேர்க்கவேண்டும் .
ஸ்திரீ ஜாதகத்திலாவது புருஷ ஜாதகத்திலாவது 7ல் சந்திரன் தனித்து இருந்து சுபர் பார்வை பெறாமல் இருந்தால் திருமணம் நிச்சயமான பின் தன் தாய் அல்லது தாய்க்குச் சமமான அந்தஸ்துடைய உறவினர் மரனமாவார் .
ஸ்திரீ ஜாதகத்தில் இரண்டாமிடம் சந்திரன் புதன் செவ்வாய் சம்மந்தமிப்பின் புகுந்த வீட்டில் மாமியார் மற்றும் மைத்துனிகளால் குழப்பம் ஏற்படும் இதற்குப் பரிகாரமாக வரன் ஜாதகத்தில் இரண்டுக்குடையவன் வலுத்து கேந்திர திரிகோணங்களில் சுபர்பார்வை பெற்று இருக்க வேண்டும்

கேட்டை நட்சத்திர தோஷம்


கேட்டை முதல் பாதத்தில் பிறந்த பெண் தன் புருஷனின் மூத்த தமயனைக் கொள்வாள் .மற்ற 2,3,4 பாதங்களுக்கு இத்தோஷம் கிடையாது .சந்திரன் சுபருடன் சேர்ந்து அல்லது சுபர் பார்வை பெற்று 5மிடம் சுபசம்மந்தமாயின் இத்தோஷம் கிடையாது 

பதிவிரதா யோகம்


சந்திரனுக்காவது 4ஆம் இடத்திற்காவது சுபர் சம்மந்தமுண்டானால் பெண் குணவதியாகவும் பதிவிரதையாகவும் இருப்பாள் இலக்கின திரிகோணங்களில் சுபர்களிருந்தால் சுகம் சந்தானம் சம்பத்து நல்ல குணம் இவைகளை உடையவளாவாள் 

Sunday, February 2, 2014

சூரியதோஷம்


மற்ற பாபக்கிரகங்களைப்போல் சூரியனால் வரும் தோஷங்கள் சூரிய தோஷம் எனப்படும் இதன் பலாபலன்கள் கீழ்க்கண்டவாறு அறியலாம்
1/ஷ்திரீக்காவது புருஷனுக்காவது 7மிடத்தில் சூரியன் தனித்து இருந்து சுபர் பார்வை பெறாதிருந்தால் தன் தந்தைக்கு விரோதமான திருமணம் நடக்கும் அல்லது திருமணத்திற்கு முன் தந்தை மரிப்பான் .
2/ஸ்த்ரீ ஜாதகத்தில் சூரியன் 2,7,8 இவ்விடங்களில் தனித்து இருந்தால் விதவையாவால் அவ்வண்ணமே புருஷ ஜாதகத்தில் சூரியன் 2,7 ஆகிய இவ்விடங்களில் சூரியன் இருந்தால் மனைவியை இழந்த துக்கம் உண்டாகும் இவ்வகை ஜாதகங்களை ஆயுள் பலன் அதிகமுள்ள ஆண் அல்லது  பெண் ஜாதகங்களுடன் சேர்க்கலாம் அதாவது ஆயுல்ஷ்தானத்தில் குரு தவிர மற்ற சுபர் உள்ள ஜாதகம் சேர்க்க வேண்டும் மேலும் இருவருக்கும் 2 அல்லது 7மிடம் சூரியன் இருந்தால் இத்தோஷம் நிவர்த்தியாகும் ஸ்திரீ ஜாதகத்தில் சூரியன் 2,7, இவ்விடங்களில் தனித்து இருந்து சுக்கிரன் புதன் வளர்பிறைச் சந்திரன் ஆகிய இவர்கள் 2 அல்லது 8மிடம் பலமிகுந்த சுபர் சம்மந்தம் பெற்றாலும் இத்தோஷம் நிவர்த்தியாகும் .
சூரியன் 2,7,8 இவ்விடங்களில் தனித்து இருக்கும் பெண்ணுக்குப் பார்க்கும் வரணுக்கு
1/  8மிடம் சுபக்கிரங்கள் சம்மந்தம் பெற்று இலக்கினாதிபதி வலுத்திருக்க வேண்டும் .
2/ 8 மிடம் குரு தனித்து இருக்க 3மிடம் பாபர் சம்மந்தம் பெறக் கூடாது .
3/ 8 மிடம் குரு தனித்து இருக்கக் கூடாது .