Pages

Tuesday, February 18, 2014

தனஸ்தானம்


சூரியனுக்குத் தனாதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டால் லோக பரோபகாரம் செய்வதில் சமர்த்தனாகவும் வித்தை தனம் இவைகளை உடையவனாகவும் இருப்பன் என்க

சந்திரனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் கலாசாஸ்திர விற்பன்னனாவான்

அங்க்காரகனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் குரூர கலா சாஷ்த்திரத்தில் விற்பன்னனாவான் மேலும் கோள் சொல்வதில் சமர்த்தனாவான்

புதன்க்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் அர்த்த சாஷ்திரத்தில் சமர்த்தனாவான்

குருவிற்குத் தானாபதி சம்மந்தமேற்பட்டால் வேதம் சாஸ்திரம் இவைகளில் நிபுணனாகவும் தருமகர்த்தாவாகவும் இருப்பான்

சுக்கிரனுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால்அழகிய வார்த்தையாடுவான்


சனிக்குத் தணாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் அற்ப வித்தையில் ஆசையுடையோனாவான்

இராகுவுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் ஸ்பஷ்டமில்லாமல் அழகாகப் பேசுவான்

கேதுவுக்குத் தனாதிபதி சம்மந்தம் ஏற்பட்டால் குளறுவாயனாகவும் பொய் பேசுபவனாகவும் இருப்பான்

மேற்சொன்ன கிரகங்கள் சுபசம்மந்தம் பெறின் சுபமாயும் அசுப சம்மந்தம் பெறின் அசுபமாயும் இருக்கும்

2வது பாவாதிபதியும் 3வது பாவதிபதி இலக்கினத்திலிருந்தால் சகோதரரால் தேடப்பட்ட தனத்தை அடைவான் அவ்வாறே 2வது பாவாதிபதியும் 4வது பாவாதிபதியும் இருந்தால் தாயால் தேடப்பட்ட தனத்தை அடைவான் அதாவது 2வது பாவாதிபதி எப்பாவாதிபதியுடன் இலக்கினத்தில் இருக்கிறானோ அந்த பாவம் மூலமாய் ஜாதகனுக்கு தனம் சேரும்

இலக்கின பாவமும் 2வது பாவமும் பரிவர்த்தனமானால் அதிகப் பிரயாசையில்லாமல் ஜாதகனுக்கு தனம் வந்து சேரும்

இரண்டாவது பாவத்தில் சந்திரனிருந்து சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சிறந்த கொடையாளி

இரண்டாவது பாவத்தில் புதன் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஜாதகன் சர்வசதாகாலமும் தன்னிடம் தனம் வத்துக்கொண்டெயிப்பான்

இரண்டாவது பாவாதிபதி எந்த திக்கில் இருக்கின்றாரோ அந்த திக்கில் 2வது பவாதிபதியின் தசையில் ஜாதகன் விசேஷ விருத்தியடைவான் இக்கிரகம் நேர்கதியில் சென்றால் மேற்சொன்ன திக்கில் தனம் சம்பாதிப்பான் வக்கிரகதியில் இருந்தால் எல்லாத் திக்குகளிலும் ஜாதகன் தனம் சம்பாதிப்பான்

2,11 வது பாவாதிபதி பரிவர்த்தனமானாலும் அப்பாவாதிபதிகள் இலக்கின கேந்திரங்களிருந்தால் ஜாதகன் சிறந்த தனவான்

 தனகாரகன் குரு 12வது பாவாதிபதிகள் 2வது பாவாதிபதி பலவீனனாயிருந்து இலக்கினத்தைச் சுபர் பாராமலிருந்தால் ஜாதகனுடைய தனம் நாசமாகும்

சூரியனும் சனியும் 2வது பாவத்திலிருந்தால் ஜாதகன் தரித்திரனாவான்

2வது பாவாதிபதியும் குருவும் 8வது பாவத்திலிருந்தால் ஜாதகன் ஊமையாவான் ஆனால் 2வது பாவாதிபதி உச்சமானால் இத்தொஷம் கிடையாது

குரு கேந்திர திரிகோனங்களிலிருந்து புதன் 2வது பாவாதிபதியாகி உச்சஷ்தானத்தில் இருந்தாலும் அல்லது சுக்கிரன் உச்ச ஷ்தானத்திலிருந்தாலும் ஜாதகன் கணித வித்தை தெரிந்தவன்

2வது பாவத்தில் செவ்வாய் சுபருடன் கூடியிருந்து புதன் இவர்களைப் பார்த்தால் அல்லது கேந்திர பாவத்திலிருந்தாலும் ஜாதகன் கணித வித்தை தெரிந்தவன்

2வது பாவதிபதியும் இலக்கினாதியும் சனியும் சம்மந்தப் பட்டு இருந்தால் எவர்சில்வர் அலுமினிய பாத்திரங்களில் உண்பான்

2வது பாவத்தில் செவ்வாயிருந்து பாபரால் பார்க்கப்பட்டால் ஜாதகன் கெட்ட உணவை உண்பான்

2வது பாவத்தில் சுபர் இருந்து 2வது பாவாதிபதி சுபருடன் கூடியிருந்து 2வது பாவம் அல்லது 2வது பாவாதிபதி அல்லது இவைகள் இரண்டும் சுபரால் பாக்கப்பட்டால் ஜாதகன் நல்ல உணவை உண்பான்

No comments:

Post a Comment