Pages

Tuesday, February 11, 2014

இலக்கின ஸ்தானம்

இலக்கினாதிபதி சுப சம்மாந்தமானால் பொன்விளையும் கிராமத்திலாவது சகல வசதிகள் கொண்ட பட்டணத்திலாவது இருப்பான்

இலக்கினாதிபதி பலத்த கிரகத்தோடு குடியிருப்பின் அரசவேலை செய்வான்

இலக்கினாதிபதி உச்சமானால் சிறப்பாக தான் இருக்கும் நிறுவனத்தை நிர்வாகம் செய்வான்

இலக்கினாதிபதி ஆட்சியிலிருந்தால் ஜன்ம பூமியிலேயே இருப்பான்

இலக்கினாதிபதி சர ராசியிலிருந்தால் சதா சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பான் ஓரிடத்தில் நிலையாக இருந்து ஜீவனம் செய்யமாட்டான்

இலக்கினாதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் ஓரிடத்தில் நிலையாக இருப்பான்

இலக்கினாதிபதி உபய ராசியில் இருந்தால் இரண்டு இடங்களில் வாசஸ்தலம் பெற்றிருப்பான்

இலக்கினாதிபதி சுபரோடு கூடி சுபஷ்தானங்களான கேந்திர திரிகோணங்களிலிருந்தால் சுகியாகவும் தினம் தினம் விருத்தியடைவோனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி அசுபரோடு கூடி சுபஷ்தானங்களான 6,8,12 மிடங்களிலிருந்தால் துக்கியாகவும் துக்கிகளால் காப்பார்ரப்பட்டவனாகவும் இருப்பன்

இலக்கினாதிபதி நீசம் பெற்றிருந்தால் இழிவான ஸ்தானத்தில் இருப்பான்

இலக்கினாதிபதி பலவானாய் உபய ராசியிளிருந்தால் சுக ஜீவியாகவும் பலமுடையவனாகவும் விருத்தியடைவொனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி பலவீனனாயிருந்தால் அடிக்கடி துபப்படுவொனாகவும் துக்கியாகவும் பீடையுடைவனாகவும் இருப்பான்

இலக்கினாதிபதி இருக்கும் பாவத்திற்குப் பன்னிரெண்டாவது பாவாதிபதி இலக்கினாதிபதிக்குச் சத்துருவானாலும் அல்லது இலக்கினாதிபதி இருக்கும் பாவத்திற்குப் பன்னிரண்டாவது பாவாதிபதி நீசமானாலும் பலவீனனானாலும் ஜாதகன் அந்நிய தேசத்திற்குப் போய்விடுவான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி சுக்கிரனுக்கு மித்துருவாகில் அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகன் அந்நிய தேசத்திலேயே நிலையாகத் தங்கிவிடுவான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி அஸ்தங்கதம் அடைந்திருந்தால் ஜாதகன் அந்த அந்நிய தேசத்தில் ஒரு குக்கிராமத்தில் இருப்பான்

இப்பன்னிரெண்டாவது பாவாதிபதி பலமுடையவனாய் இருந்தால் ஜாதகன் அந்த அந்நிய தேசத்தில் பெரிய பட்டணத்தில் இருப்பான்

இப்பன்னிரெண்டாவது பாவதிபதி ஆட்சி உச்சம் மித்ரு க்ஷேத்திரங்களிலிருந்து தனக்கு இரண்டு பக்கமும் சுக்கிரகங்க்கலிருந்தால் ஜாதகன் தன் மனத்திற்கிஷ்டமான தேசங்களுக்குப் போய்க் கொண்டே இருப்பான்


இலக்கினாதிபதி இரண்டு பாபக்கிரகங்களுக்கு மத்தியிலிருந்தால் ஜாதகன் எதிரிகளுக்குப் பயந்திருப்பான்

No comments:

Post a Comment