Pages

Monday, November 24, 2014

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு

ஆதி சங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரியில் வரும் 32 வது ஸ்லோகத்திற்குரிய யந்திரத்தை வியார நிறுவனங்களில் வைத்திருந்தால் வியாபாரம் விருத்தியடையும் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த எந்திரம் கீழே தரப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை உற்று நோக்கியபோது ஒரு பெரிய உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது. அந்த யந்திரம் இரு கைகள் இணைவது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. கைபேசி தயாரிப்பு நிறுவனமான "நோக்கியா" இந்த குறியீட்டை தெரிந்தோ,தெரியாமலோ பயன்படுத்தி வியாபரத்தில் வெற்றியடைந்துள்ளது. இது போல் நம்ம ஊர் கூட்டுறவு வங்கிகளும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வருகின்றன. நமது நாட்டின் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியும்,தன் கட்சிக்கு பின்னடைவு வந்த காலத்தில் தன் கட்சியின் சின்னமாக கை சின்னத்தை பயன்படுத்தி பின்னடைவுகளை சரி செய்துள்ளது.காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளை பார்த்து வந்தால் அன்றைய தினம் நாம் ஈடுபடும் விவகாரங்களில் வெற்றியடையலாம் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலன மார்வாடி கடைகளில் கைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளதைக்காணலாம். இந்து மதக்கடவுள் சின்னங்களும் கைகளைக்கொண்டு ஏதாவது ஒரு முத்திரைக்காட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் ஒன்று கூடும்போது கைகுலுக்குவதோ அல்லது கைகளால் கட்டித்தழுவிக்கொள்வதோ வழக்கமாக உள்ளது. இதன் மூலம், கைகள் மக்களை இணைக்கும் சின்னமாக உள்ளதை புரிந்துகொள்ளலாம்.

மருத்துவ ஜோதிடம்

ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மருத்துவ ஜோதிடம் அவைகளில் ஒரு பிரிவாகும். சித்த மருத்துவத்தில் நாடி பார்த்து, நடை பார்த்து,முகம் பார்த்து,கை பார்த்து,உடல் பார்த்து நோய் கண்டறிகிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தில் உச்சி முதல் உள்ளங்கால் வரை தோன்றும் அறிகுறிகளையும்,மனதில் தோன்றும் எண்ணங்களையும் ஆராய்ந்து நோய் கண்டறிகிறார்கள்.அலோபதி மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகூட சோதனைகள் செய்து நோய் கண்டறிகிறார்கள்.இது போல் ஜோதிடர்கள் தனி நபர் ஜாதகங்களை ஆய்வு செய்து நோய் கண்டறிவது சாத்தியமே.
சித்த மருத்துவர்களும்,ஆயுர்வேத மருத்துவர்களும், காலமறிந்து சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலோர் ஜோதிடம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஜோதிடம் மூலம் நோய் கண்டறிவது எப்படி என்பதை விளக்குவது மருத்துவ ஜோதிடமாகும்.
ராசிகளின் நோய்
மேசம் – பித்தம்
ரிசபம் – நீர்க்கோர்வை
மிதுனம் – வாயு
கடகம் – நீர்க்கோர்வை
சிம்மம் – பித்தம்
கன்னி – வாயு
துலாம் – நீர்க்கோர்வை
விருச்சிகம் – பித்தம்
தனுசு – வாதம்
மகரம் – வாயு
கும்பம் – வாதம்
மீனம் – வாதம்

ராசிகளின் தத்துவங்கள்
மேசம் – நெருப்பு
ரிசபம் – நிலம்
மிதுனம் – காற்று
கடகம் – நீர்
சிம்மம் – நெருப்பு
கன்னி – நிலம்
துலாம் – காற்று
விருச்சிகம் – நீர்
தனுசு – நெருப்பு
மகரம் – நிலம்
கும்பம் – காற்று
மீனம் – நீர்

ராசிகளின் உடல் உறுப்புகள்
மேசம் – தலை
ரிசபம் – கழுத்து,முகம்,வாய்,பல்,நாக்கு,உதடு,கண்
மிதுனம் – தோள்பட்டை,கைகள்,விரல்,நகம்,காத
கடகம் – மார்பு,
சிம்மம் – தொப்புள்,மேல்வயிறு,முதுகு
கன்னி – அடிவயிறு,குடல்
துலாம் – இடை,இடுப்பு,மர்ம உறுப்பு
விருச்சிகம் – குதம்,பிருஷ்டம்
தனுசு – தொடை
மகரம் – கால் மூட்டு
கும்பம் – கணிக்கால்
மீனம் – பாதம்

கிரக தத்துவம்
சூரியன் - நெருப்பு
சந்திரன் - நீர்
செவ்வாய் - நெருப்பு
புதன் - காற்று
குரு - ஆகாயம்
சுக்கிரன் - நீர்
சனி - காற்று
ராகு – காற்றும் நெருப்பும்
கேது – நெருப்பு

கிரக பிணி

சூரியன் –சுரம்,பித்தம்
சந்திரன் - நீர்க்கோர்வை
செவ்வாய் – மூட்டுவலி,பித்தம்
புதன் – தேமல்,வாதம்
குரு- மூளைக்கோளாறு,வாயுக்கோளாறு
சுக்கிரன் – சிறுநீரக கோளாறு
சனி – நரம்பு தளர்ச்சி, வாயுக்கோளாறு
ராகு - வாயுக்கோளாறு
கேது – நகச்சுற்று,பித்தம்

கிரக முக பாகம்

சூரியன் – வலது கண்
சந்திரன் – இடது கண்
செவ்வாய் - புருவம்,பற்கள்
புதன் நெற்றி,நாக்கு,கழுத்து
குரு – மூக்கு,நாசி
சுக்கிரன் - கன்னம்
சனி - தாடை
ராகு – வாய்,உதடு,காது
கேது –முடி

கிரக உடல் பாகம்

சூரியன் – வலது கண்,எலும்பு
சந்திரன் – இடது கண்,மார்பகம்,சிறுநீரகம்,வயிறு
செவ்வாய் - இருதயம்
புதன் – கைகள்,கழுத்து,தோள்பட்டை,தொண்டை,
குரு –மூளை,தொடை,பாதம்,மூக்கு, நாசி
சுக்கிரன் – முகம்,கருப்பை,சுக்கிலம்,சுரோணிதம்,கன்னம்
சனி-பிருஷ்டம்,மூட்டு,முழங்கால்,ஜீரண உறுப்பு,தாடை
ராகு –குடல்,மலக்குடல்,காது,தலை
கேது - நகம்,முடி,ஆசனவாய்,மர்ம உறுப்பு

கிரக உடல் உள்பாகம்

சூரியன் - எலும்பு
சந்திரன் -ரத்தம்
செவ்வாய்-எலும்பு மச்சை,சிவப்பணுக்கள்
புதன்- தோல்
குரு-சதை,கொழுப்பு
சுக்கிரன் - விந்து
சனி-ஜீரண உறுப்பு
ராகு - குடல்
கேது- நரம்பு

நோய் குறிகாட்டும் பாவங்கள்

6 ம் பாவம் – தவறான உணவு பழக்க வழக்கங்களால் வரும் நோய்கள்
8 ம் பாவம் – பரம்பரை நோய்கள்,பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய்கள்.
பாதக ஸ்தானங்கள் – செய்வினை கோளாறுகளால் வரும் நோய்கள்.
சர லக்னங்களுக்கு 11ம் பாவமும், ஸ்திர லக்னங்களுக்கு 9ம் பாவமும், உபய லக்னங்களுக்கு 7ம் பாவமும் பாதக ஸ்தானங்களாகும்.

நோய் நிவர்த்தி பாவங்கள்

6 க்கு 12 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.
8 க்கு 2 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.
11 க்கு 5 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.
9 க்கு 3 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.
7 க்கு 1 ம் பாவம் நிவர்த்தி பாவமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் பாவங்கள்

3 மற்றும் 5 ம் பாவங்கள்

நோய் குறிகாட்டும் கிரகங்கள்

செவ்வாய் - தவறான உணவு பழக்க வழக்கங்களால் வரும் நோய்கள்
சனி - பரம்பரை நோய்கள்,பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறிக்கும் கிரகங்கள்

சூரியன் – உடல் தெம்பு, புத்துணர்ச்சி,உயிராற்றல்
சந்திரன் – உடல் சத்துக்கள்.
சுக்கிரன் – வீர்ய சக்தி

மருத்துவ ஜோதிட விதிகள் (பாரம்பரிய முறை)

1.கடுமையான நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.
2.நாள்பட்ட வியாதிகளை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.
3.இளமையில் வரும் நோய்களை கண்டறிய சந்திரனின் நிலையை பார்க்கவும்.
4.முதுமையில் வரும் நோய்களை கண்டறிய சூரியனின் நிலையை பார்க்கவும்.
5.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யக்கூடாது.
6. ஜாதகத்தில் செவ்வாய்,சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.
7.ஜாதகத்தில் சூரியன்,சந்திரன் ஆட்சி,உச்சம் பெற்று நின்றால் நோய்கள் எளிதில் குணமாகும்.
8.மேசம்,சிம்மம்,ரிசபம்,கடகம்,துலாம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு நோய் எளிதில் குணமாகும்.
9.கன்னி லக்கினம்,கன்னி ராசியில் பிறந்த பெண்கள் நல்ல செவிலியராக செயல்படுவர்.
10.லக்கினத்திற்கு 6 ல் சனி,செவ்வாய் உள்ளவர்கள் நோயாளிகளை பார்க்கவோ,தொடவோ கூடாது.இவர்கள் தொட்டால் நோய் எளிதில் குணமாகாது.
11. லக்கினத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,உள்ள்வர்கள் நோயாளியை பார்ப்பதும்,தொடுவதும் நல்லது.நோய் வரைவில் குணமாகும்.
12. லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று வலுத்து நிற்க,6-8க்குடையவர்கள் நீச்சம்,பகை, அஸ்தமனம் பெற்று நின்றால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக இருக்கும்.
13. லக்கினாதிபதி பகை , நீச்சம் ,அஸ்தமனம் பெற்று நிற்க,6-8க்குடையவர்கள் ஆட்சி ,உச்சம் பெற்று நின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
14. லக்கினத்திற்கு 6 -8 ல் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் நின்றால் ஒரே நேரத்தில் பல வியாதிகல் ஒன்றாக வந்து தக்கும்.
15.நோயாளியின் லக்கினத்திற்கு 6-8 ம் வீடுகளை ஜென்ம லக்கினமாகவோ,ஜென்ம ராசியாகவொ அல்லது பெயர் ராசியாகவோகொண்டவர்கள்.நோயாளியை பார்க்கக்கூடாது.இவர்கள் பார்த்தால் நோய் எளிதில் குணமடையாது.
16. லக்கினத்திற்கு 6-8 ல் நின்ற கிரகம் அல்லது 6-8 க்குடைய கிரகங்கள் சம்பந்தமான நோய்கள் வரும்.
17.ராகு ,கேதுக்கள் நின்ற பாவங்கள் குறிக்கும் உடல் உறுப்புகளில் ஏதாவது நோய் இருக்கும்.

நோய் வரும் காலம்

1.லக்கினத்திற்கு 6-8 க்குடைவர்களின் சாரம் மற்றும் 6-8 ல் நின்ற கிரங்களின் சாரம் பெற்ற கிரகம் தசா-புக்தி நடத்தும்போது உடலில் நோய்கள் தோன்றும்.
2.குருவுக்கு 6-8ல் நிற்கும் கிரகம் தசா-புக்தி நடத்தும்போது உடலில் நோய்கள் தோன்றும்.
3. லக்கினத்திற்கு 6-8 க்குடைவர்கள் நிற்கும் ராசி மற்றும் அந்த ராசிக்கு திரிகோண ராசிகளில் கோச்சார குரு அல்லது கோச்சார சனி வரும் காலம் உடலில் நோய் தோன்றும்.
4. லக்கினத்திற்கு 6-8 க்குடைவர்கள் நின்ற நவாம்ச ராசி மற்றும் அந்த ராசிக்கு திரிகோண ராசிகளில் கோச்சார குரு அல்லது கோச்சார சனி வரும் காலம் உடலில் நோய் தோன்றும்.
5.லக்கினத்திற்கு அல்லது லக்கினாதிபதி நின்ற ராசிக்கு திரிகோண ராசிகளில் ராகு வரும் காலம் உடலில் நோய் தோன்றும்.

சிகிச்சைக்கு உகந்த நட்சத்திரங்கள்

அஸ்வினி,சதயம் –அனைத்து வியாதிகளும் நீங்க.
பூசம்- பரம்பரை நோய்கள்,பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய்கள் நீங்க.
மகம்-பித்ரு சாபத்தால் வரும் நோய்கள் நீங்க.

வாஸ்து

வீட்டின் மேற்கு தெற்கு பாகங்களில் மலை,குன்று,உயரமான பாறை,உயரமான கட்டிடங்கள் இருந்தால் நன்மை பயக்கும்.வீட்டின் கிழக்கு,வடக்கு பாகங்களில் ஏரி,குளம், நதி,வாய்க்கால்,சமுத்திரம் போன்றவை இருந்தால் நன்மை பயக்கும்.

மாந்தி கணிதம்

ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும் மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.
பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை
திங்கள்கிழமை - 22 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை
புதன் கிழமை - 14 நாழிகை
வியாழக்கிழமை - 10 நாழிகை
வெள்ளிக்கிழமை - 6 நாழிகை
சனிக்கிழமை - 2 நாழிகை
இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை
திங்கள்கிழமை - 6 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை
புதன் கிழமை - 26 நாழிகை
வியாழக்கிழமை - 22 நாழிகை
வெள்ளிக்கிழமை - 18 நாழிகை
சனிக்கிழமை - 14 நாழிகை
மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை
மாந்திஸ்புடம் என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும்.
1 நாள் = 60 நாழிகை = 360 பாகை
1 பகல் = 30 நாழிகை = 180 பாகை
1 இரவு = 30 நாழிகை = 180 பாகை
பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.
பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156
=156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132
=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை
=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12
=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.
இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை
= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156
= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132
= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108
= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.

மருத்துவ ஜோதிடத்தில் பாவ காரகங்கள்

ஜோதிடத்தில் பன்னிரண்டு பாவங்களும் பல்வேறு காரகங்களை குறிக்கின்றன. அவைகளில் மருத்துவ ஜோதிடத்திற்கு சம்பந்தப்பட்ட பாவ காரகங்கள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.
பாவ காரகங்கள்
முதல் பாவம்: பொது ஆரோக்கியம்,நோய் எதிர்ப்பு சக்தி
இரண்டாம் பாவம்: உணவு பழக்கம்
மூன்றாம் பாவம்: உடல் உறுதி,உடல் தகுதி,உடல் வளர்ச்சி,மூளை வளர்ச்சி
நான்காம் பாவம்:ஓய்வு,மருந்து,தாய் வழி மரபணு,கனவு
ஐந்தாம் பாவம்: நோய் எதிர்ப்பு சக்தி, உடல் தெம்பு
ஆறாம்பாவம்: நோய், காயம், புண்கள்,அறுவை சிகிச்சை, மருத்துவர், செவிலியர், சுகாதாரம், அன்றாட பழக்க வழக்கங்களால் வரும் நோய்கள்
ஏழாம் பாவம்: சிகிச்சை முறை
எட்டாம் பாவம்:ஆயுள்,நாள் பட்ட வியாதிகள்,பரம்பரை வியாதிகள், உடல் கழிவுகள்.
ஒன்பதாம் பாவம்: தந்தை வழி மரபணு, சிகிச்சை முறை
பத்தாம் பாவம்:உழைப்பு,தந்தை வழி மரபணு
பதினொன்றாம் பாவம்: நோய் நிவாரணம்
பன்னிரண்டாம் பாவம்: மருத்துவ மனை

நவ ரத்தினங்கள் அணிய வேண்டிய விரல்கள்

நீச்ச கிரகங்கள் தரும் பலன்கள்

சூரியன் நீச்சம் - வெளிச்சத்திற்கு வர விருப்பம் இல்லாமல் ஒதுங்கி வாழ்தல்
சந்திரன் நீச்சம் - மனோ பலம் இல்லாமை
செவ்வாய் நீச்சம் - மிருக குணம் இல்லாமை, புண்ணியம் செய்வதில் விருப்பம்
புதன் நீச்சம் - ஞாபக சக்தி இல்லாமை
குரு நீச்சம் - ஆச்சாரம் இன்மை, பாவம் செய்ய அஞ்சாமை
சுக்கிரன் நீச்சம் - ஆடம்பரத்தில் நாட்டமின்மை
சனி நீச்சம் - உடல் உழைப்பை விரும்பாமை

வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

நம் நாட்டில் பெரும்பாலும் திருமத்திற்கு ஆண்களை விட வயது குறைவான் பெண்களை பார்த்து இணைப்பார்கள்.இதற்கு காரணம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை தூண்டக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பது நிற்க லேட்டாகும்.ஆனால் பெண்களுக்கு சீக்கிரமாக 50 வயதினிலேயே ஹார்மோன் சுரப்பது நின்றுவிடும்.அதன் அடிப்படையிலேயே வயது குறைந்த பெண்ணை இணைத்தார்கள்.
ஆனால் வது மூத்த பெண்ணை திருமணம் தாரளமாக செய்யலாம்.ஏனென்றால் செக்ஸ் மட்டுமே இல்லறம் கிடையாது.அன்பும்,பாசம்,புரிந்துணர்வு,அரவணைப்பு போன்ற குணங்களே வெற்றிகரமான வாழ்வுக்கு முக்கியமாகும்.வயது மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்டு எத்தனையோ பேர் வெற்றிகரமாக வாழ்கிறார்கள்.
ஜோதிட ரீயாக பார்க்கபோனால் களத்திர ஸ்தானத்தில் ராகு,கேது,சனி சம்பந்தம்,களத்திர ஸ்தானதிபதியின் நிலை,குடும்ப ஸ்தானம்,ராகுவுடன் சுக்கிரன் சம்பந்தம் போன்றவைகளால் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் நிலை அமையும்.

பன்னிரண்டு லக்கினக்காரர்களுக்கும் அருள்புரியும் தெய்வங்கள்

மேசம்- முருகன், சிவன்,
ரிசபம்- விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
மிதுனம் - விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
கடகம் - பிள்ளையார்,முருகன், பார்வதி,
சிம்மம் - முருகன், சிவன்,
கன்னி - விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
துலாம் - விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
விருச்சிகம் - பிள்ளையார்,முருகன், பார்வதி
தனுசு - முருகன், சிவன்,
மகரம் - விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
கும்பம் - விஷ்ணு,லக்ஷ்மி,ஐயப்பன்
மீனம் - பிள்ளையார்,முருகன், பார்வதி

கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....

Tuesday, November 11, 2014

முடி உதிர்வதை தடுக்க;

வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணையில் ஊறவைத்து 4வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்