Pages

Monday, November 24, 2014

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு

ஆதி சங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரியில் வரும் 32 வது ஸ்லோகத்திற்குரிய யந்திரத்தை வியார நிறுவனங்களில் வைத்திருந்தால் வியாபாரம் விருத்தியடையும் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த எந்திரம் கீழே தரப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை உற்று நோக்கியபோது ஒரு பெரிய உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது. அந்த யந்திரம் இரு கைகள் இணைவது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. கைபேசி தயாரிப்பு நிறுவனமான "நோக்கியா" இந்த குறியீட்டை தெரிந்தோ,தெரியாமலோ பயன்படுத்தி வியாபரத்தில் வெற்றியடைந்துள்ளது. இது போல் நம்ம ஊர் கூட்டுறவு வங்கிகளும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வருகின்றன. நமது நாட்டின் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியும்,தன் கட்சிக்கு பின்னடைவு வந்த காலத்தில் தன் கட்சியின் சின்னமாக கை சின்னத்தை பயன்படுத்தி பின்னடைவுகளை சரி செய்துள்ளது.காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளை பார்த்து வந்தால் அன்றைய தினம் நாம் ஈடுபடும் விவகாரங்களில் வெற்றியடையலாம் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலன மார்வாடி கடைகளில் கைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளதைக்காணலாம். இந்து மதக்கடவுள் சின்னங்களும் கைகளைக்கொண்டு ஏதாவது ஒரு முத்திரைக்காட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் ஒன்று கூடும்போது கைகுலுக்குவதோ அல்லது கைகளால் கட்டித்தழுவிக்கொள்வதோ வழக்கமாக உள்ளது. இதன் மூலம், கைகள் மக்களை இணைக்கும் சின்னமாக உள்ளதை புரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment