Pages

Friday, February 14, 2014

காதல் திருமணம்.

ஐந்தாம் அதிபதி ஏழில் அல்லது ஏழாமதிபதி ஐந்தில் இருந்தால் காதல் திருமணம்.


ஒன்பதாம் அதிபதி அல்லது குரு கெட்டால் சமுதாய கட்டுப்பாடு மீறி காதல்.


7ம் பாவம் 9ம் பாவம் சம்பந்தம் காதல் திருமணம். ( PAC ).


1, 5, 7, 9 பாவங்கள் தொடர்பு காதல் திருமணம். பாவாதிகள் கெட்டுவிட்டால் காதல் திருமணம் தடைபடும்.


செவ்வாய், சுக்ரன் தொடர்பு மற்றும் 1, 5, 7 வீடு தொடர்பு காதல் திருமணம்.


ஆண்/பெண் இருவரின் சுக்ரன், செவ்வாய் ஒரே பாகையானால் எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் திருமணம் செய்து கொள்வர்.


7ம் அதிபதியும் சுக்ரனும் சனியினால் பார்க்கப்பட்டால் கட்டாயம் காதல் திருமணம்.

7ல் ராஹு/கேது, சந்த்ரன், புதன் இருந்தால் காதல் ஏற்படும்.


பொதுவாக ரிஷபம், கடகம், சிம்ஹம், துலாம், மீனம் ராசிகள் காதல் வயப்படும் ராசிகள் ஆகும்.


1ம் அதிபதி 5ம் அதிபதி பார்வை, சேர்க்கை இருந்தாலும்


1ம் அதிபதி 5ம் அதிபதி பரிவர்த்தனை ஆனாலும் காதல்


வலுவான சந்த்ரன், செவ்வாய் மற்றும் சுக்ரன் 5ல் இருப்பது அல்லது ஐந்தைப் பார்த்தாலும்


கேது, புதன் சேர்க்கை


5, 7ம் அதிபதிகள் லக்னத்தில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அல்லது பரிவர்த்தனை


5ம் அதிபதியுடன் செவ்வாய் தொடர்பு.

காதல் திருமணமாக ஜாதகத்தில்
சுக்கிர பலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .
ஒருவர் மீது ஒருவர்
அதீதமான அன்பு கொள்ளச் சுக்கிரன் உதவுவார். இனக்
கவர்ச்சியும் சுக்கிரனால்
உண்டாகும். அன்பு , காதல் , பாசம் , நேசம் , இனிமையான
பேச்சு , உல்லாசம் , சுகம் ,
காமம் , மனஉற்சாகம் இவை எல்லாவற்றிற்கும் கூட
சுக்கிரனே காரணகர்த்தா ஆவார் .
சுக்கிரன்
மீனம், ரிஷபம் , துலாம் ஆகிய ராசிகளில்
இருப்பது சிறப்பாகும் .
பரணி ,
பூரம் , பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்து,
நட்சத்திர நாயகன்
சுக்கிரன் ஆட்சி , உச்சம் பெற்றிருந்தால் பலம்
கூடும் .
சுக்கிரன் சுப
பலம் பெற்று , களத்திர ஸ்தானாதிபதியாகிய 7 ஆம்
வீட்டோனும் பலம் பெற்று ,
குரு மறைவு ஸ்தானம் பெற்று , குறிப்பிட்ட தசை,
புக்தி நடப்பவர்களுக்குக்
காதல் திருமணம் ஆகும் .
சுக்கிரனும் 7 ஆம் வீட்டோனும் லக்னத்திற்கு 5
ஆம் இடத்தில் இருப்பது விசேடமாகும்.
ஒரு பெண் ஆணிடமோ, ஆண்
பெண்ணிடமோ தன் காதலைச் சொல்லத்
துணிவு வேண்டுமல்லவா? அந்தத் துணிவை
வழங்குபவர் செவ்வாய் ஆவார் . இதனால் காதல்
திருமணத்துக்குச் செவ்வாயின்
பலமும் அவசியம் தேவை .
செவ்வாய் ஆட்சியாக மேஷ, விருச்சிகத்தில்
இருந்தாலோ , மகரத்தில் உச்சமாக இருந்தாலோ , 3 ஆம்
இடத்தில் வலுத்திருந்தாலோ
மனத்துணிவு உண்டாகும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட
நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே மனத்
துணிவு இருக்கும்.
செவ்வாயின் பலமும் சேருமானால் இரட்டிப்பு பலம்
அமையும்.
பூர்வ
புண்ணியம் என்பதும் அவசியமாகும். இதற்கு 5 ஆம்
இடமும் , 5 ஆம் வீட்டுக்கு
அதிபதியான கிரகமும் வலுத்திருக்க வேண்டும்.
மேஷ, விருச்சிக
ராசிக்காரர்களுக்கு 7 ஆம் வீட்டோன் சுக்கிரன்
ஆவதால் சுக்கிர பலம்
கூடியிருக்குமானால் காதல் திருமணம் ஆகும் .
கன்னியா
ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே , " கன்னி "
இருப்பதால் கன்னிப் பெண்களின்
நட்பு எளிதாக அமைந்துவிடும்.
பேச்சு சாதுர்யமும் இருக்கும். இவர்களுக்கு
சுக்கிர பலமும் கூடியிருக்குமானால்
இரட்டிப்பு பலம் உண்டாகும். கன்னியா
ராசிக்கு 7 ஆம் இடம் மீனம் ஆகும் . களத்திர ஸ்தானம் .
மீனம் சுக்கிரன் உச்சம்
பெறும் வீடாகுமல்லவா? இதனால் கன்னியா ராசியில்
பிறந்தவர்களுக்குக் காதல்
கைகூடும்.
சுக்கிரனின் எண்ணான 6 , 15, 24 தேதிகளில்
பிறந்து, சுக்கிர
பலமும் இருப்பவர்களுக்குக் காதல் திருமணம் ஆக
வாய்ப்பு அதிகம் உண்டு .
5
ஆம் வீட்டோன், 7 ஆம் வீட்டோன் , சுக்கிரன், செவ்வாய்
ஆகியோரது பலம்
பெற்றவர்கள் காதல் திருமணம்
செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் .
இவர்களது காதல் பல்லாண்டுகள்
நீடித்து நிலைத்து இருக்கும்.

No comments:

Post a Comment