Pages

Monday, December 16, 2013

நிஸ்வ யோகம்


நிஸ்வ யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு இரண்டாமிடம் பாபக்கிரங்க்களால் சம்மந்தப்பட்டு இரண்டுக்குடையவன் 6,8,12, ஆகிய துர்த்டானங்களில் இருந்தால் நிஸ்வயோகம் ஏற்படும் .


நிஸ்வ யோக பலன்
நிஸ்வயோகத்தில் பிறந்தவன் நல்வார்த்தை இல்லாதவனாகவும் பலமில்லாத குடும்பம்  ஈன சேர்க்கை அழுக்கான உறுதியற்ற பற்கள் ஆகிய இவைகளை உடையவனாகவும் புத்தி புத்திரன் வித்தை சொத்து ஆகியவைகள் அற்றவனாகவும் சத்துருக்களால் அபகரிக்கத் தகுந்த திரவியமுடையவனாகவும் இருப்பான்



நிஸ்வ யோக உதாரணம்

இலக்கினத்திற்கு இரண்டாமிடம் பாபக்கிரகமான செவ்வாய் அமையப் பெற்று இரண்டுக்குடைய சுக்கிரன் அஸ்தங்கதம் அடைவதால் நிஸ்வ யோகம் ஏற்படும்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் நன்றாக இருந்த குடும்பத்தில் குழப்பம் செய்து அக்குடும்பத்தினரைத் தன் தீய சொற்களால் மயக்கிப் பிரித்து துன்பம் செய்ததால் மறு ஜ்ர்ந்மத்தில் நிஸ்வ யோகம் என்னும் தீய யோகத்தைப் பெறுகிறான்


பரிகாரம்
நல்ல கும்பத்தினருக்கு பூமிதானம் செய்ய வேண்டும் ஞாயாதி காரியங்களில் ஈடுபடாதிருக்க வேண்டும்

No comments:

Post a Comment