Pages

Tuesday, December 10, 2013

இலட்சுமி யோகம்


யோககால கிரகநிலை

ஜெனன கால இலக்கினத்திற்கு பாக்கியனாடனான 9க்குடையவனும் சுக்கிரனும் உச்சத்திலாவது கேந்திர திரிகொனங்களில் இருந்தால் இலட்சுமி யோகம் ஆகும்

யோக பலன்

இலட்சுமி யோகத்தில் பிறந்தவன் நித்தியமும் மங்களகரமான பெண்கள் சம்மந்தம் ரோகமின்றி ஆரோக்கியமாயிருத்தல் தனிகன் தேஜஸ் தன்னைச் சார்ந்த ஜனங்களால் ரசிக்கப்படுதல் மகாலட்சுமிப் பிரசாதமாக செல்வத்தைப் பெறுதல் சிறப்பான வாகனம் யானை குதிரை உலகைக் காப்பதில் குணம் ஆகியவை பெற்று நீடுழி வாழ்வான்

இலட்சுமி யோக உதாரணம்
இலக்கினத்திற்குப் பாக்கியாதிபதியான 9குடைய புதன் ஆட்சியிலும் சுக்கிரன் திரிகொனங்களில் இருப்பதால் இலட்சுமி யோக பலன் ஏற்பட்டு நீடுழி வாழ்வான்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் வெள்ளிக்கிழமை தவறாமல் வீட்டில் இலட்சுமி பூஜை செய்து சுமங்கலிகளை ஆச்ரயித்து வந்தால் மறு ஜென்மத்தில் இலட்சுமி யோகம் பெற்று மிக்க புகலடைவான்

No comments:

Post a Comment