Pages

Wednesday, December 11, 2013

சீகண்ட யோகம்


சீகண்ட யோககால கிரகநிலை
இலக்கினாதிபதி சூரியன் சந்திரன் ஆகிய இவர்கள் கேந்திர திரிகொனங்களில் ஆட்சி உச்சம் நட்பாக இருந்தால் சீகண்ட யோகமாகும்

சீகண்ட யோக பலன்
சீகண்ட யோகத்தில் பிறந்தவன் உருத்திராட்ச மாலையைத் தரித்தவனும் திருநீற்றைப் போன்ற வெண்மையான ஒளி பொருந்திய தேகத்தை உடையவனும் மகாத்மா என்று மக்களால் துதிக்கப்படுபவனும் அனவரதமும் சிவத்தியானம் செய்பவனும் சைவசித்தாந்தங்களில் சொல்லிய பிரகாரம் விரதங்களை அனுஷ்டிப்பவனும் சாதுக்களை உபசரிப்பனும் சைவம் தவிர பிற துதிப்பவனுமாக இருப்பான்


சீகண்ட யோக உதாரணம்
இலக்கினாதிபதி   செவ்வாய் கேந்திரமான பத்தாமிடத்தில் உச்சம் பெற்றதுடன் கேந்தர திரிகொனங்களான 4,5மிடங்களில் சந்திரனும் சூரியனும் ஆட்சி பெற்றதால் சீகண்ட யோகம் என்னும் பிரபலயோகத்தைப் பெறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் சிவனடியார்களாத் துதித்து அவர்களுக்கு வேண்டிய அணைத்து உபசாரங்களையும் செய்ததால் சிவபெருமானின் அருளால் ஜென்மமில்லாத சிவபதம் அடைவான்

No comments:

Post a Comment