Pages

Tuesday, December 10, 2013

கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?



இந்தக் கேள்வி நிறைய பேருக்கு உண்டு. சிறுநீரகக் கல்லுக்குக் காரணம் கால்சியம் ஆக்சலேட். அதற்கும், சாதாரண கால்சியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிகப்படியான கால்சியத்தை, உடல் சேர்த்து வைக்காது. அது தானாக வெளியேறி விடும் என்பதால் பயப்பட வேண்டாம்.

யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம்?

*50 + பெண்களுக்கு குடும்பப் பின்னணியில் ஆஸ்டியோபொரோசிஸ் இருப்பவர்களுக்கு
*உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு
*ஒல்லியான மற்றும் சிறிய உடல்வாகு உள்ளவர்களுக்கு
*கால்சியம் இல்லாத உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு
*மிக இளம் வயதில் மெனோபாஸ் வந்தவர்களுக்கு
*வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு
*புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு
*தைராய்டு, கிட்னி மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுப்போருக்கு
*சில வகை ஆஸ்துமா மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், தூக்க மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் எடுப்போருக்கு..

எவ்வளவு கால்சியம் தேவை?

குழந்தைகளுக்கு (4 முதல் 8 வயது வரை) -800 மி.கி.

9 முதல் 18 வயது வரை- 1,300 மி.கி.

19 முதல் 50 வயது வரை- 1,000 மி.கி.

51 பிளஸ்...--1,200 மி.கி.

கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு -1,200 மி.கி.

No comments:

Post a Comment