Pages

Thursday, December 5, 2013

முன்கோபியாக இருப்பது ஏன்?


ஒருவருடைய பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு பன்னிரண்டு வீடுகளாக நம்முடைய பெரியவர்கள் பிரிந்திருக்கிறார்கள். அந்த 12 பாவகங்களின் மூலம் நாம்அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பாவத்தையும் நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒருவருக்கு கோபம் இருக்கிறதா, இல்லையா என்று அவர் முகத்தை பார்த்தே தெரிந்து கொள்கிறோம். பொதுவாக அவர் நல்லவர் என்றால் அமைதியானவர் என்றால் லக்னத்தில் எந்த கிரகங்களும் இருக்கக்கூடாது. எனவே லக்னத்தில் எந்த கிரகங்களும் இல்லாமல் பிறந்தவர்கள் ரொம்ப நல்லவர்களாகப் பிறப்பார்கள். அதே நேரத்தில் சுபகிரகங்கள் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள். லக்னத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய தீய கிரகங்கள் இருந்தால் அவர் கண்டிப்பாக முன் கோபியாக இருப்பார். மூன்று கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தாலும் முன்கோபியாக இருப்பார். இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், முன்கோபத்தை வார்த்தைகளில் காட்டுவார்கள். சுபகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் (சுக்கிரன், சந்திரன், குரு) அமைதியான சுபாவத்தை உடையவர்களாக இருப்பார்கள். எனவே செவ்வாய், சூரியன், சனி போன்ற கிரகங்கள் தனியாக இருந்தாலும் லக்னத்தில் இணைந்திருந்தாலும் அவர்கள் முன்கோபியாக இருப்பார்கள். சுபகிரகங்களான சுக்கிரன், குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனித்தனியாக இருந்தாலும், சேர்ந்திருந்தாலும் அமைதியான சுபாவ முடைவர்களாக இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment