Pages

Monday, December 16, 2013

மிருதி யோகம்


மிருதி யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு மூன்றாமிடம் பாபக் கிரகங்கள் சம்மந்தப்பட்டு மூன்றுக்குடைய கிரகம் 6,8,12 ஆகிய துர்த்தானங்களில் இருந்தால் மிருதி யோகம் ஏற்படும் .


மிருதி யோக பலன்
மிருதி யோகத்தில் பிறந்தவன் எத்ரிகளால் அவமானம் அடைதல் சகோதரர் இன்மை மன உளைச்சல் பலமின்மை தனமில்லாமை  மெலிந்த திரேகம் விகார குணம் உடைமை ஆகிய இவைகளை அடைவான்

மிருதி யோக உதாரணம்
இலக்கினத்திற்கு மூன்றாமிடம் பாபக் கிரகமாகிய செவ்வாய் நீச்சம் பெற்று 3க்குடைய சந்திரன் ஆறாமிடம் இருப்பதால் ஜாதகன் மிருதி யோகத்தால் துன்புறுவன்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் சரியான சமயத்தில் சகோதரனைக் கைவிட்டு மேலும் அவனுக்குப் பல இன்னல்களையும் கொடுத்து வந்ததால் சகோதர சாபம் ஏற்பட்டு மறு ஜென்ன்மத்தில் மிருதியோகம் என்னும் அவயோகத்தால் மிகவும் துன்பப்படுகிறான்


பரிகாரம்
தந்தையிடமிருந்து தான் பெற்ற செல்வம் முழுவதையும் சகோதரனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் சகோதரன் இல்லாவிட்டால் தன் உற்ற நண்பனுக்காவது தன் குல தெய்வ கோயிலுக்காவது தான தர்மம் செய்ய வேண்டும்  

 

No comments:

Post a Comment