Pages

Wednesday, January 21, 2015

திருமண விதிகள்

1. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான்
2. சுக்கிரன் இருக்கும் வீட்டிற்கு அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.
3. ஏழாம் வீட்டிற்கு அதிபதி பாபிகள் வீட்டில் நின்றாலும், பாபிகளால் பார்க்கப்பட்டாலும் ஜாதகனுக்குத் திருமணம் தூர தேசத்தில் நடக்கும்.
4. நவாம்ச சக்கரத்தில் ஏழாம் வீட்டு அதிபன் சுபர்களுடைய வீட்டில் இருந்தால் உள்ளூர்ப் பெண்ணே மனைவியாக வருவாள்.
5. ஏழாம் அதிபது பாப கிரகமாகி , ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மறைந்து நின்றால், எத்தனை கிரகங்களின் பார்வை அங்கே விழுகிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு ஏற்படும்.
6. ஏழாம் அதிபதி சுபக்கிரகங்களுடன் சேர்ந்தால் மனைவி நல்லவளாக இருப்பாள். அதுவே பாப கிரகங்களுடன் சேர்க்கை என்றால் மனைவி பொல்லாதவளாக இருப்பாள்.
7. ஏழிற்குரியவன் ராகுவுடன் சேர்ந்து ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகன் இழிவான பெண்ணை மணக்க நேரிடும்.
8. சுக்கிரனோ அல்லது ஏழிற்குரியவனோ ஜாதகத்தில் நீசமாகியிருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்வாக இருக்காது.
9. காதலுக்கு மென்மையான உணர்வும், நல்ல உள்ளமும் வேண்டும். அதற்குரிய கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும் வலுவாக இருந்தால் காதல் உண்டாகும்.
10. 7ல் புதனும், சுக்கிரனும் இருந்து, 11ல் சந்திரனும் இருந்து, குருவினுடைய பார்வை பெறுவதும் ஒருவகையில் ராஜ யோகமே. அந்தப் பெண்ணை மணந்து கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான்.

1 comment: