Pages

Sunday, January 18, 2015

ஒருவர் அறிவாளியா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

புத்திசாலியாக ஒருவர் இருக்க வேண்டுமென்றால் புத்தி ஸ்தானம் என்று சொல்லப்படும் 5ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். ஐந்தாமிடத்து அதிபர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் புத்திசாலியாக இருப்பார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். ஏன் ஐந்தாமிடத்தை புத்திர ஸ்தானமாக வைத்தார்கள் என்பதையும் பார்ப்போம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் தான் ஒருவர் இந்த பிறவியில் புத்திசாலியாக இருக்க முடியும். ஐந்தாமிடத்து அதிபர் ஆட்சி உச்சம் பெற்றால் புத்திசாலியாக இருப்பார். குரு, சுக்கிரன், புதன், சந்திரன், ஆகிய நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகமோ அல்லது பல கிரகங்களோ பலம் பெற்று ஐந்தாமிடத்தில் இருந்தால் புத்திசாலியாக இருப்பார்கள். மேற்கண்ட கிரகங்கள் வேறு இடங்களில் இருந்து ஐந்தாமிடத்தைப் பார்த்தாலும் புத்திசாலியாகவே இருப்பார்கள்.
ஒருசிலர் என்னிடம் கேட்க விரும்புவார்கள். ஐயா, என்னுடைய ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி போன்ற பாவகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் 5ல் பலம் பெற்றால் நான் புத்திசாலியாக இருப்பேனா என்று கேட்க நினைப்பார்கள். உங்கள் ஜாதகத்தில் 5ல் சுபகிரகங்கள் பலம் பெற்றாலும், பாபகிரகங்கள் பலம் பெற்றாலும் நீங்கள் புத்திசாலியாகவே இருப்பீர்கள். ஆனாலும் பாபகிரகங்களுக்கென்று ஒரு குணம் இருக்கிறது அல்லவா! அதன் குணத்தை அது கண்டிப்பாக காட்டியேத் தீரும். தீயகிரகங்கள் பலம் பெற்று ஐந்தில் நின்றால், அப்படிப்பட்ட ஜாதகர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை நல்ல விஷயங்களுக்கோ அல்லது ஆக்க பூர்வமான விஷயங்களுக்கோ பயன்படுத்த மாட்டார். கிரிமினல் விஷயங்களுக்கோ அல்லது அடாவடியான விஷயங்களுக்கோ மட்டுமே பயன்படுத்துவார். உலகிற்கு தீமையை விளைவிக்கும் காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
ஐந்தாமிடம் பலம் பெற்றாலும், சந்திரன் பலம் பெற்றாலும் ஆக இந்த இரண்டு கிரகங்கள் பலம் பெற்றவர்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். புதன் கல்விக்கு அதிபதி, குரு அறிவுக்கு அதிபதி, சந்திரன் கற்பனைக்கு அதிபதி, ஆக ஒருவருடைய ஜாதகத்தில் புதன், குரு, சந்திரன் பலம் பெற்றாலும், ஆக இந்த இரண்டு கிரகங்கள் பலம் பெற்றால் மிகவும் அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் சாதிக்க முடியாத அத்தனை விஷயங்களையும் சாதிக்க முடிந்தவராகவும் இருப்பார்.

No comments:

Post a Comment