Pages

Sunday, January 18, 2015

ஜோதிட குறிப்பு

பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும், 
குரு பார்க்க கோடி நன்மை, 
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும், 
துலா கேது தொல்லை தீர்க்கும், 
மறைந்த புதன் நிறைந்த கல்வி, 
அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்,
குரு கொடுப்பின் சனி தடுப்பார்;
சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?,
எட்டில் சனி நீண்ட ஆயுள் .
உச்சனை உச்சனை பார்த்தால் பிச்சைக்காரன்,
குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும்.
ராகுவைப் போல் கொடுப்பாருமில்லை,
கேதுவைப் போல் கெடுப்பாருமில்லை......
கேட்டையில் பிறந்தவன் மனதில் கோட்டை கட்டி வாழ்வான்......
மகமகள் ஜகம் ஆள்வாள் (மகத்தில் பெண் பிறப்பது சிறப்பு)



சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.
ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு.
கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.

லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.
சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.

குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு.
பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்) நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.



No comments:

Post a Comment