Pages

Wednesday, January 14, 2015

வீட்டைக் கட்டிப்பார்

இன்றையப் பதிவிலும், அடுத்தப் பதிலும் வீடுகள் கட்டுவதற்கான சிலவிதிகளைக் காண்போம்.
1“அரசே கேள் வாகனத் தானாதி நின்ற ராசி 
அன்போடு நல்லோர் வீடாகிப் பணபரம், கேந்திரமாய் உறைசெறியுச் சனித்த
சிறு குடிசையும் மாட அரங்கம்”
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்துக்கு நான்கிற்குடைய கிரகம் எந்த வீட்டிலமர்ந்துள்ளதோ, அந்த வீடு சுபக்கிரக வீடாக இருக்கவேண்டும். அந்த வீடு, நான்காம் வீட்டுக்கு கேந்திரமாகவோ (1,4,7,10), பண்பரஸ்தானமாகவோ (2,6, 8, 11) இருக்கவேண்டும். அப்படியிருந்தால்,ஜாதகரின் குடிசைவீடு, வருங்கலத்தில் மாடமாளிகையாய் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிலவிதிகளாக,
1. இலக்கினாதிபதியும், நான்காம் அதிபதியும் கேந்திர, திரிகோணங்களில் அமர, இவர்களை சுபக்கிரகங்கள் காண, அலங்காரமிக்க மாளிகை கட்டுவார்.
2. இலக்கினாதிபதி 1,2,5,9,11,-ல் இருந்து, அவ்வீடே ஆட்சி, உச்ச, நட்பு வீடாக இருந்து, குரு போன்ற சுபக்கிரகங்கள் காண, ஜாதகர் குடியிருக்கும் மஆளிகைக்கு நான்கு திசைகளிலும் வாசல் இருக்கும்.
3. இலக்கினாதிபதி கேந்திர, திரிகோணங்களில் இருந்து, நான்காம் வீட்டில் சுபக்கிரகமிருந்தால், மாளிகை வீடு கட்டுவார்.
4. நான்காமதிபதி குரு, சுக்கிரனுடன் கூடினாலும், அல்லது இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டாலும், மாளிகை கட்டி வாழ்வார்.
5. “”………….நாலோனும் உச்சம் தன்னில் நேயவே
பெருமாடக்கூடமுண்டாம்”
என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் சிலவிதிகளை அடுத்தப்பதிவுகளில் காணலாம்.

No comments:

Post a Comment