Pages

Saturday, January 31, 2015

குரு

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தணன்,அமைச்சன்,அரசன்,ஆசான்,ஆண்டனப்பான் ,குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
இனம் : பிராமண இனம்.
வடிவம் : உயரம்.
அவயம் : இருதயம்.
உலோகம் : பொன்.
ரத்தினம் : புஷ்பராகம்.
மலர் : முல்லை.
வாகனம் : யானை.
சமித்து : அரசு.
சுவை : தித்திப்பு.
தான்யம் : கொத்துக்கடலை.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : வாத நாடி.
திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ). அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக்கோள்.
குணம் : சாந்தம்.
ஆசன வடிவம் : செவ்வகம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகை கோள்கள் : புதன், சுக்கிரன்.
சம கோள்கள் : சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 வருடம்.
திசா புத்திக் காலம் : 16 ஆண்டுகள்.
நட்பு வீடு : மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
பகை வீடு : ரிஷபம்,மிதுனம், துலாம்.
ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் : மகரம்.
உச்சம் பெற்ற இடம் : கடகம்.
மூலதிரிகோணம் : தனுசு.
உப கிரகம் : எமகண்டன்.
காரகத்துவம் : புத்திர காரகன்.
புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு வியாழன் காரகன்.
சுப கோளான குரு ஒருவரின் ஜாதகத்தில்
வலுவாக் இருப்பது சுப பலனை தரும்.

No comments:

Post a Comment