Pages

Saturday, January 31, 2015

சுக்கிரன்.

சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப்படுகிறது.
அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன்,பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி ஆகியனவாகும்.
பால் : பெண் கிரகம்.
நிறம் : வெண்மை.
இனம் : பிராமண இனம்.
வடிவம் : சம உயரம்.
அவயம் : மர்மஸ்தானம்.
உலோகம் : வெள்ளி.
ரத்தினம் : வைரம்.
மலர் : வெண்தாமரை.
வாகனம் : குதிரை, மாடு.
சமித்து : அத்தி.
சுவை : புளிப்பு.
தான்யம் : மொச்சை.
பஞ்ச பூதம் : அப்பு. (நீர் )
நாடி : சிலேத்தும நாடி.
திக்கு : தென்கிழக்கு.
அதி தேவதை : இலக்குமி, வருணன்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : ஸ்திரக் கோள்.
குணம் : ரஜசம்.
ஆசன வடிவம் : ஐங்கோணம்.

நட்பு கோள்கள் : புதன், சனி, இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா புத்திக் காலம் : 20ஆண்டுகள்.
நட்பு வீடு : மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.
பகை வீடு : கடகம், சிம்மம், தனுசு.
ஆட்சி பெற்ற இடம் : ரிஷபம், துலாம்.
நீசம் பெற்ற இடம் : கன்னி.
உச்சம் பெற்ற இடம் : மீனம்.
மூலதிரி கோணம் : துலாம்.
உப கிரகம் : இந்திரதனுசு.
காரகத்துவம் : களத்திர காரகன்.
சங்கீதம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு, இளமை, இலக்குமி கடாட்சம், வாகனம், சுகம், போகம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

No comments:

Post a Comment