Pages

Saturday, January 31, 2015

புதன்

சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.
அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.
பால் : அலி கிரகம்.
நிறம் : பச்சை நிறம்.
வடிவம் : உயரம்.
அவயம் : கழுத்து.
உலோகம் : பித்தளை.
ரத்தினம் : மரகதம்.
மலர் : வெண்காந்தள்.
வாகனம் : குதிரை
சமித்து : நாயுருவி.
சுவை : உவர்ப்பு.
பஞ்ச பூதம் : வாயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : வடக்கு.
அதி தேவதை : விஷ்ணு.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : அம்பு.

நட்பு கோள்கள் : சூரியன், சுக்கிரன்.
பகை கோள் : சந்திரன்.
சம கோள்கள் : செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம் : 17 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு : கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் : மீனம்.
உச்சம் பெற்ற இடம் : கன்னி.
மூலதிரி கோணம் : கன்னி.
உப கிரகம் : அர்த்தப்பிரகரணன்.
காரகத்துவம் : மாதுல காரகன்.
கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுக்கு புதன் காரகன்.
கல்வியில் சிறந்து விளங்க ஜாதகத்தில் வித்யாகரன் எனும் புதன் பலம்பெறுவது சிறப்பு.

No comments:

Post a Comment