Pages

Saturday, January 31, 2015

சூரியன்

சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது. ஆதவன், அருணன், அரியமா, அருக்கன், அலரி, அழரவன், அனலி,அண்டயோனி, அரி, ஆதவன், ஆயிரஞ்சோதி, இருள்வலி,உதயம், ரவி, எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, பகலோன், பர்க்கன், பனிப்பகை, பானு, பகல், பங்கயன், பதங்கன், பரிகி, மார்த்தாண்டன், மித்திரன், விரிச்சிகன் , விரோசனன், விண்மனி, வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ரவிஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : வெண்மை
வடிவம் : சம உயரம்.
அவயம் : தலை.
உலோகம் : தாமிரம்.
ரத்தினம் : மாணிக்கம்.
மலர் : செந்தாமரை.
வாகனம் : மயில், தேர்.
சமித்து : எருக்கு.
சுவை : துவர்ப்பு.
பஞ்ச பூதம் : தேயு.
நாடி : பித்த நாடி.
திக்கு : கிழக்கு.
அதி தேவதை : சிவன்.
தன்மை : நிலையான கோள்.
குணம் : தாமஸ்ம்
ஆசன வடிவம் : வட்டம்.
நட்பு கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகை கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
சம கோள் : புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 மாதம்.
திசா காலம்: 6 ஆண்டுகள்.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
நீசம் பெற்ற இடம் : துலாம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.
மூலதிரி கோணம் : சிம்மம்.
உப கிரகம் : காலன்.
காரகத்துவம் : பித்ருகாரகன்.பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.
ஆன்மாவை பிரதிபலிப்பவன் சூரியன். ஓருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டு மானால் சூரியபலம் ஜாதகத்தில் அமைய வேண்டும்.

No comments:

Post a Comment