Pages

Sunday, January 12, 2014

இளமையில் ஏற்படும் திருமணம்



:-

ஏழாமிடமாகிய களத்திர ஸ்தானத்தில் சுபர் வீற்றிருந்து 7ம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து காணப்பட்டால் இளம்வயதில் திருமணம் நடைபெறுகிறது.
ஏழாம் அதிபதி 2-ல் பலம் பெற்றுக்காணப்பட்டு 7-ல் குரு இருந்தால் வாலிப வயதில் கெட்டிமேளம் முழங்க திருமணம் நடைபெறுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சுபருடன் கூடி சுபர் சேர்க்கைப் பெற்று, சுபர்களின் நடுவில் இருந்தால் இளவயதில் திருமணம் நடைபெறுவதுடன் இனிமையான இல்வாழ்வு அமையப்பெறுகிறது.
குரு அல்லது சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமையப்பெற்று அசுபர்கள் சேர்க்கையோ, அல்லது அசுபர்கள் பார்வையோ ஏற்படாமல் இருந்தால் இளவயதில் அழகான அற்புதமான களத்திரம் அமையப்பெறுகிறது.
லக்கினத்திற்கு கேந்திரத்தில் சுக்கிரனும் சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடைபெறும் அமைப்பு உண்டாகிறது.
ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரனாகி, அந்தச்சுக்கிரன் 1, 4, 7, 10 ஆகிய ஏதாவது ஒரு வீட்டில் அமையப்பெற்றால் இளம் வயதில் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுகிறது.
லக்னாதிபதி ஏழாமதிபதி இருவரும் 5, 7, 9, 11 போன்ற இடங்களில் இருந்தால் பருவ வயதில் அற்புதமாக திருமணம் நடைபெறுகிறது.
காலதாமதமாக நடைபெறும் திருமணம் :-
--------------------------------------------------------
ஒருவர் ஜாதகத்தில் அசுபர்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் இணைந்து 7-ல் அமையப்பெற்றால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறுகிறது.
லக்கினத்தில் ராகு, 7-ல் கேது அமையப்பெற்று, ராகு கேது பிடிக்கும் எல்லா கிரகமும் அமையப்பெற்று கால சர்ப்ப யோகம் அமையப்பெற்ற ஜாதகர்களுக்கு மிகவும் காலம் கடந்து திருமணம் நடைபெறுகிறது.
ஏழாமதிபதி 6, 8, 12 ல் மறையப்பெற்று சூரியனுடன் சேர்ந்து காணப்பட்டால் மிகவும் தாமதமாக திருமணம் நடைபெறுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் 7ம் இடத்தில் அசுபர்கள் என்று கூறப்படுகின்ற சனி, ராகு, கேது அமையப்பெற்ற 2, 5, 9 ஆகிய இடங்களில் செவ்வாய், சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் காலதாமதமாக திருமணம் நடைபெறுகிறது.
2, 4, 7 ஆகிய இடங்களில் அசுபர்கள் என்று கூறப்படுகின்ற ராகு, கேது, சனி, செவ்வாய் வீற்றிருந்தாலும், மிகவும் காலம்கடந்து திருமணம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment