Pages

Wednesday, January 15, 2014

நாய்கள் - ஜாக்கிரதை


பாரம்பரிய ஜோதிடத்தின் விதிகளை நவீன ஜோதிட முறைகளை பின்பற்றுபவர்கள் குறை கூறுவது உண்டு.ஆனால் என் அனுபவத்தில் பாரம்பரிய ஜோதிட விதிகள் பலன் தரவே செய்கின்றன.லக்கினத்திற்கு 4 ஆம் வீட்டில் ஒரு நீச்ச கிரகம் இருந்தால் ஜாதகரை நாய் கடிக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. என்னுடைய தந்தையின் லக்கினம் மேசம்,மேசத்திற்கு 4ல் கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று அமர்ந்துள்ளார். என் தந்தையை நாய் கடித்திருக்கிறது. இன்னொரு நண்பரின் லக்கினம் சிம்மம் அவருக்கு 4ல் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் அவரையும் நாய் கடித்திருக்கிறது. என்னிடம் பயின்ற மாணவர்கள் பலரும் இதை உறுதி செய்தனர். உங்களுக்கு லக்கினத்திற்கு 4ல் நீச்ச கிரகம் இருந்தால் நாய்களிடம் கவனமாக இருங்கள்.

No comments:

Post a Comment