Pages

Monday, May 12, 2014

கிரக காரகங்கள் பற்றி.


குரு
ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ அதன் ஐந்து வயதுவரை குருவின் காரகாத்தால் ஆளுமை செய்யபடும்.

புதன்
5 வயது முதல் 15 வயதுவரை உள்ள பருவம் புதனின் காரகாத்தால் ஆளுமை செய்யப்படும்.
செவ்வாய்
15 வயது முதல் 22 வயது வரை உள்ள நிலை ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது. இந்த நிலையில் காம குணங்கள் நிறைந்தது காணப்படும். இவர்கள் செவ்வாயின் காரகாத்தல் ஆளுமை செய்யப்படுவார்கள். செவ்வாயை போககாரகர் எனவும் அழைப்பர்.
சுக்கிரன்
திருமணம் ஆகாத பெண்கள் அனைவருக்கும் சுக்கிரன் காரகமாக அமைவார். சுக்கிரனை காமகாரகன் அல்லது களத்திர காரகன் என்று அழைப்பர்.
சூரியன்
ஒரு ஆண் குழந்தை பெற்றவுடன் அவர் சூரியனின் ககாரகமான தந்தை காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.
சந்திரன்
ஒரு பெண் குழந்தை பெற்றவுடன் சந்திரனின் காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.
ராகு
ஆண் தான் பெற்ற குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டன் காரகமான ரகுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார்.
கேது
பெண் தான் பெற்ற குழந்தை திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டி காரகமான கேதுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார்.
சனி
பாட்டன் காகரமும், பாட்டி காரகமும் உடைய மனிதர்கள் வயதான காலத்தில் சனியின் காரகமான ஆயுள் காரகமாக மற்றம் அடைகின்றனர்,.

No comments:

Post a Comment