Pages

Monday, May 12, 2014

"கூட்டுத்தொழில்" யாருக்கு சிறப்பாக இருக்கும்?


ஒரு ஜாதகரின் தொழில் பற்றி 10ம் பாவம் மூலம் அறியலாம். அவரின் கூட்டாளி 7ம் பாவம். 7ம் பாவத்திற்கு (தொழில்) 10ம் பாவம் 4ம் பாவம் ஆகும்.
7ம் பாவபுத்திநாதன் 4 10ம் பாவங்களை தொடர்பு பெற்றால் "கூட்டுத் தொழில்" சிறப்பாக இருக்கும்.
1 7ம் பாவ புத்திநாதன் 4 10ம் பாவங்களை தொடர்பு பெற்றால் "நீண்ட காலம் கூட்டுத்தொழில்" செய்வார்கள்.
7ம் பாவபுத்திநாதன் 5 11ம் பாவ தொடர்பு பெற்றால், அவர்களின் கூட்டுத்தொழில் சந்தோசமாக இருக்கும்.
7ம் பாவபுத்திநாதன் 3 9 பாவதொடர்பு பெற்றால், கூட்டாக தொழில் செய்ய முடியாது. (நமது தொழில் 10 க்கு 12ம் பாவம் 9ம் பாவமும், கூட்டாளி தொழில் 4க்கு 12ம் பாவம் 3ம் பாவம்)
7ம் பாவபுத்திநாதன் 4 6 10 12ம் பாவ தொடர்பு பெற்றால், கூட்டு தொழில் செய்து, பிரிய வேண்டிய வாய்ப்பு வரும். ஏனெனில், 6 12ம் பாவம் செயல்படும் போது (கணவன் - மனைவி (அ) நண்பர்கள் பிரியக் கூடிய வாய்ப்பு உண்டு)
7ம் புத்திநாதன் 2 8 12 பாவ தொடர்பு பெற்றால், கூட்டுத் தொழில் மூலம் பொருளாதாரம் இழப்பு சந்திக்க நேரும்.
7ம் பாவ புத்திநாதன் 2 8 பாவங்களை தொடர்பு பெற்றால். கூட்டுத் தொழிலில் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
7ம்பாவ புத்திநாதன் 6 8 12 பாவங்களை தொடர்பு பெற்றால், கூட்டுத் தொழில் மூலம், பொருளாதாரம் இழப்பு, கடன் இவைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு.
இதில் 7ம் பாவ புத்திநாதன் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம்
கிரககாரத்திற்கேற்ப பலன்கள் அமையும்

No comments:

Post a Comment