Pages

Sunday, August 17, 2014

திருமணம் நடத்த சூப்பர் நட்சத்திரம் எது?

திருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம் "சுவாதி என்று யஜுர்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இது நரசிம்மருக்குரிய நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டால், அந்தப் பெண் கணவனிடம் கோபித்துக் கொள்ள மாட்டாள்

புகுந்தவீட்டிற்கு பெருமையும், பிறந்த வீட்டுக்கு நற்பெயரும் வாங்கித் தருவாள்.

கணவர், மாமியார், நாத்தனார் பிரச்னை செய்கிறார்கள் என கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்கு வரமாட்டாள்
என்றும் யஜுர் வேதத்தின் முதல் அஷ்டகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

இதுதவிர, ஒரு பெண்ணின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தில் இருந்து எண்ணும் போது 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 24வது நட்சத்திரங்களும் திருமணம் நடத்த சிறந்தவையே.

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்! வணங்க வேண்டிய கிரகங்கள்! செய்ய வேண்டியஅபிஷேகம்

நட்சத்திரம் எழுத்துக்கள்.....

அசுவினி சு-சே-சோ-ல, ர

பரணி லி-லு-லே-லோ

கிருத்திகை அ-இ-உ-ஏ

ரோகிணி ஒ-வ-வி-வு

மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு

திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க

புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ

பூசம் ஹு-ஹே-ஹோ-டா

ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா

மகம் ம-மி-மு-மே

பூரம் மோ-டா-டி-டு

உத்திரம் டே-டோ-ப-பா-பி

அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா

சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ

சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு

விசாகம் தி-து-தே-தோ

அனுஷம் ந-நி-நு-நே

கேட்டை நோ-யா-யீ-யு

மூலம் யே-யோ-பா-பி

பூராடம் பூ-தா-ட-பா-டா-பி

உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி

திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க

அவிட்டம் க-கீ-கு-கே

சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு

பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி

உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ

ரேவதி தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி

27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி கேது
பரணி சுக்கிரன்
கார்த்திகை சூரியன்
ரோகிணி சந்திரன்
மிருகசீரிஷம் செவ்வாய்
திருவாதிரை ராகு
புனர்பூசம் குரு (வியாழன்)
பூசம் சனி
ஆயில்யம் புதன்
மகம் கேது
பூரம் சுக்கிரன்
உத்திரம் சூரியன்
அஸ்தம் சந்திரன்
சித்திரை செவ்வாய்
சுவாதி ராகு
விசாகம் குரு (வியாழன்)
அனுஷம் சனி
கேட்டை புதன்
மூலம் கேது
பூராடம் சுக்கிரன்
உத்திராடம் சூரியன்
திருவோணம் சந்திரன்
அவிட்டம் செவ்வாய்
சதயம் ராகு
பூரட்டாதி குரு (வியாழன்)
உத்திரட்டாதி சனி
ரேவதி புதன்.

அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:

அசுவினி சுகந்த தைலம்
பரணி மாவுப்பொடி
கார்த்திகை நெல்லிப்பொடி
ரோகிணி மஞ்சள்பொடி
மிருகசீரிடம் திரவியப்பொடி
திருவாதிரை பஞ்சகவ்யம்
புனர்பூசம் பஞ்சாமிர்தம்
பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம் பால்
மகம் தயிர்
பூரம் நெய்
உத்திரம் சர்க்கரை
அஸ்தம் தேன்
சித்திரை கரும்புச்சாறு
சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம் இளநீர்
அனுஷம் அன்னம்
கேட்டை விபூதி
மூலம் சந்தனம்
பூராடம் வில்வம்
உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம் கொம்பு தீர்த்தம்
அவிட்டம் சங்காபிஷேகம்
சதயம் பன்னீர்
பூரட்டாதி சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி வெள்ளி
ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார்.

நான் ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன் கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் – கையிலே பைசா நிக்கவே இல்லை. இப்படி – பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.

சிவனே னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே இல்லாமே திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும்.

உற்றார் உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் , இப்போ கை கொட்டி சிரிக்கும்.

கவலையே படாதீங்க. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க. அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க செஞ்ச பாவக் கணக்கு – நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு – மனசை தேத்திக்கோங்க.

ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம்! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ….

இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் – யாரும் சனியோட கடுமையால பாதிக்க
படக்கூடாதுங்கிறதுக்காக சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு – காலணிகள், அன்ன தானம் அளிப்பது , மிக நல்லது.

அரசு வேலை கிடைக்க சூரியமந்திரம்...

ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா

இதை ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அமைந்த சூரிய ஹோரையில் சிவபெருமானின் கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பின்பு தினமும் அதே நேரத்தில் நமது வீட்டிலிருந்தபடியே, சூரிய தரிசனம் செய்துவிட்டு, 24 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் ஜபத்தை கிழக்கு முகமாக அமர்ந்து செய்துவர வேண்டும். 108 நாட்கள் செய்து வர வேண்டும். அந்த 108 நாட்களும் அசைவ உணவையும், கருப்பு நிற ஆடைகள் அணிவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்யமோஹன கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

நாம் சாப்பிடும் உணவுகளில் கிரக அதிபதிகள் காரகத்துவம் என்ன என்று பார்ப்போம்-

சூரியன் -பூரி, சப்பாத்தி
சந்திரன் -இட்லி ,சட்டினி
செவ்வாய் -அடைதோசை
புதன்-சேமியாகிச்சடி
குரு -நெய் தோசை
சனி -உளுந்து வடை
சுக்கிரன் -வெண் பொங்கல்
ராகு -இடியாப்பம்
கேது -புரோட்டா

நகைசுவையாக பேசும் ஆற்றலும் யார் ?

சுக்கிரன் புதன்
சுக்கிரன் புதன் சேர்க்கை ஜாதகத்தில் இருந்தால் அவர்களின் அடிப்படை குணம் நகைசுவையாக பேசும் ஆற்றலும் ,ஆடம்பரத்தை விருபும்வர்,கலைகளில் ஈடுபாடும் ,மற்றவரை களால் தனக்கு வேலை ஆக வேண்டும் என்றால் சாமர்த்தியமாக வேலை வாங்கும் தந்திரமும்...
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் கற்கும் வாய்ப்புகளும், நல்ல குடும்பத்தில் இருந்தால் பெண் அமையும் யோகமும்
பெண்களால் ஆதாயமும்...

தொழில்களில் கலை சம்பந்தமான துறையில் ஈடுபாடும் நடிப்பு எழுத்தாற்றல் கதை ஆசிரியர்கள் தயாரிப்பாளர்.ஒருவர் நகை சுவை கதாபத்திரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் புதன் வலிமையாக இருக்க வேண்டும் சுக்கிரன் புதன் தொடர்பும் இருந்தால் தான் அவரால் வெற்றி பெற முடியும்..