Pages

Sunday, April 26, 2015

நீசபங்க ராஜயோகங்கள்


எந்தக் கிரகம் நீசமடைந்துள்ளதோ அந்தநீச ராசி நாதனாவது அக்கிரகமாவது சந்திர எக்கிரகத்திற்கு இருந்தால் தருமவானும் சக்கரவர்த்தியும் ஆவான்

சூரியன் துலாத்தில் நீசம் பெற்றாலும் அந்தநீச ராசிக்கு உச்ச நாதனான சனி சந்திரனுக்குச் கேந்திரத்தில் இருந்ப்பதால் சூரியன் நீசபங்க ராஜயோகம் கொடுக்கும்

நீசனிருக்கிற ராசி நாதனாவது அல்லது அந்நீச ராசிக்கு உச்ச நாதனாவது இலக்கினத்திற்குக் கேந்திரத்தில் இருந்தால் அவன் அனைத்து ராஜாக்களாலும்  வணங்கப் பெறும் சக்கரவர்த்தியாவான்

ஓர் கிரகம் ஒரு ராசியிலிருந்து அவ்விராசிநாதானால் பார்க்கப் பெற்றால் கீர்த்தியுள்ள அரசனாவான் அவ்விதமாய் நல்ல ஸ்தானங்களில் இருந்துவிட்டால் அரசனாவதற்குத்  தடையேயில்லை

நீச கிரகத்திற்கு நீச ராசிநாதணும் அந்நீச கிரகத்திற்கு எது உச்ச ராசியோ அவ்விராசினாதணும் சம்மந்தப்பட்டாலும்  ராஜாவாவான்

சுக்கிரன் கன்னியில் நீசம் நீச ராசிநாதன்  புதன் சுக்கிரனுடைய  உச்சராசியான மீனத்திற்கு ராசிநாதன் குரு இப்புதணும் குருவும் ஒரு ராசியில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தாலும்  நீசபங்க ராஜ யோகமாகும்   

No comments:

Post a Comment