Pages

Wednesday, August 20, 2014

ஜாதகருக்கு காதலில் வெற்றியா, தோல்வியா. அசிங்க அவமானங்களா?

ஒருவருடைய 5ம் பாவம் அவரை காதலிக்கும் நபரை குறிக்க கூடியது. காதலினால் ஏற்ப்படும் விளைவுகளை 5ம் பாவம் கொண்டு அறியலாம். ஜாதகர் காதலிக்கும் நபரை கைபிடிப்பரா அல்லது பிரிவுகள் ஏற்படுமா அல்லது காதலிக்கும் நபரால் ஜாதகருக்கு பிரச்சினைகள் ஏர்ப்படுமா என்பதனை 5 மற்றும் 11ம் பாவங்களை கொண்டு கண்டறியலாம்.
5ம் பாவ உப நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் தன்(5ம்) பாவத்திற்கு 8,12ம் பாவங்களான 4,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் காதலில் தோல்வி ஏற்ப்படும்.
அல்லது
5ம் பாவ உப நட்சத்திர அதிபதி லக்னத்திற்கு பாதகமான பாவங்களாகிய 8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகர் தான் காதலினால் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும். அசிங்கங்கள் மற்றும் கௌரவ குறைவு வரும்.
மேலும் ஜாதகரின் 7ம் பாவம் அவரை தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களை குறிக்கும். 7ம் பாவத்திற்கு 5ம் பாவம் அவர்களின் காதலர்களை குறிக்கும். 11ம் பாவமானது 7ம் பாவத்திற்கு 5ம் பாவமாக வரும். இந்த 11ம் பாவம் தன பாவத்திற்கு 8,12ம் பாவங்களாகிய 6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் இந்த ஜாதகரால் பிரச்சினைகளை சந்திப்பார்.
மேலும் 11ம் பாவம் 8 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு தான் காதலிக்கும் நபரால் மனதளவில் கடுமையான பிரச்சினைகள் ஏற்ப்படும். 5ம் பாவம் 11ம் பாவத்தினை தொடர்புகொண்ட ஜாதகரின் மனம் அனைவரையும் காதலிக்கும் குணம் உடையது.
5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 4,10 பாவங்களை தொடர்பு கொண்டால் காதலில் தோல்வி ஏற்ப்படும் அல்லது காதல் திருமணம் முறிவு ஏற்ப்படும்.
பிரச்சினைகள் இல்லாமல் காதல் திருமணத்தில் முடிய 5ம் பாவம் 7 மற்றும் 11ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருக்க வேண்டும்.
5ம் பாவம் 9 மற்றும் 11 அல்லது 9 மற்றும் 12ம் பாவங்களை தொடர்பு கொண்டால் தவறான காதல் உறவுகள் ஏற்ப்படும்.

No comments:

Post a Comment