நிர்ப்பாக்கிய யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு ஒன்பதாமிடம் அசுபக் கிரகங்கள் 6,8,12 ஆகிய இத்தானங்களில் பகை நீச்சம் மூடம் ஆகிய துர்ப்பலத்துடன் இருந்தால் நிர்ப்பாக்கிய யோகம் ஏற்படும்
நிர்ப்பாக்கிய யோக பலன்
நிர்ப்பாக்கிய யோகத்தில் பிறந்தவன் தாய் தந்தையர் வழியில் வந்த சொத்துக்கள் அத்தனையும் நாசஞ் செய்து சாதுக்கள் குருக்கள் இவைகளை நிந்தித்து தருமசிண்தனை ஒன்றுமில்லாமல் அழுக்கேறிய கந்தல் துணியை உடுத்தி தரித்திரனாய் அதிதுக்கத்திற்கு இருப்பிடமாய் வாழ்வான்
நிர்ப்பாக்கிய யோக உதாரணம்
இலக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் பாபக்கிரகமாகிய சனி நீச்சம் பெற்று 9க்குடைய செவ்வாய் துர்த்தானமாகிய 12மிடம் நீச்சமடைந்திப்பது நிர்ப்பக்கிய யோகம் ஆகும்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தந்தை சொல் கேளாமல் தந்தைக்குப் பலவித உபத்திரவம் கொடுத்து தீமை செத்தாலும் வயோதிகக் காலத்தில் தந்தையைத் துரத்தியதாலும் மறு ஜென்மத்தில் பிதிர் சாபத்தால் நிர்ப்பாக்கிய யோகம் என்னும் அவயோகத்தைப் பெற்று பலவித அவமானங்களையடைவான்
பரிகாரன் சாரதா திலஹோமம் செய்ய வேண்டும் பிரதி அமாவாசையன்று விரதமிருக்க வேண்டும்
No comments:
Post a Comment